tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஆக. 16–

நாட்டில் மக்களிம் அதிகளவில் பணப்புழக்கம்ஏற்பட்டுள்ளது. வறுமைக்கேட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துவிட்டது என்று ஜனாதிபதி முர்மு கூறினார்.

நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி வானொலி மற்றும் டிவிசேனல்கள் வழியாக, நாட்டு மக்களிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அவர் பேசியதாவது:

78ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தயாரிப்புகளில் மக்கள் அனைவரும் ஈடுபட்டிருப்பதை காணும் போது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. நமது குடும்பங்களோடு பலவகை பண்டிகைகளை கொண்டாடுவதைப் போல் நமது சுதந்திரத் திருநாளையும், குடியரசுத் திருநாளையும் கூட, நாம் கொண்டாட வேண்டும். 

ஆகஸ்ட் மாதம் 14ம் தேதியை, தேசம் துண்டாடப்பட்ட பயங்கரமான தினமாக நாம் கடைப்பிடித்து வருகிறோம். சுதந்திரத் திருநாளைக் கொண்டாடும் ஒரு நாள் முன்பாக, இதுவரை காணாத மனித சமூகம் சந்தித்த பேரிடரை நினைவு கொள்ளும் அதே வேளையில், அப்போது சின்னாபின்னமான குடும்பங்களுக்கு உறுதுணையாக நாம் இருப்போம்.

 நமது அரசியல்சட்டத்தின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறோம். 2021 – 2024க்கு இடைப்பட்ட காலத்தில், எட்டு சதவீத வருடாந்தர வளர்ச்சி வீதத்தை அடைந்திருப்பதன் மூலம் மிக வேகமாக முன்னேற்றம் காணும் பொருளாதாரங்களில் பாரதம் இடம் பிடித்திருக்கிறது. மக்களிடம் அதிக பணப்புழக்கம் ஏற்பட்டிருப்பதோடு, வறுமைக்கோட்டிற்குக் கீழே இருப்போரின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்திருக்கிறது. 

பாரதம் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக ஆகியிருப்பது நம்மனைவருக்கும் பெருமிதம் தரும் விஷயம். விரைவிலேயே உலகின் முப்பெரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும் நிலைக்கு நம்மை நாம் தயார் செய்து கொண்டு வருகிறோம். 

சமூகநீதி என்பது, நமது அரசின் மிக உயர்வான முதன்மையாகும். பட்டியல் இனத்தவர்கள், பட்டியல் பழங்குடியினத்தவர் மற்றும் விளிம்புநிலையில் வாழும் சமூகத்தின் பிற மக்களின் நலனுக்காக, இதுவரை இல்லாத முன்னெடுப்புக்களை அரசு மேற்கொண்டுள்ளது. நமது சமூகத்தில் பெண்களுக்கு சமத்துவம் மட்டுமல்லாது, சமநிலையையும் தாண்டி ஒரு படி அளிக்கப்படுகிறது. பெண்கள் நலன் மற்றும் பெண்களின் அதிகாரப்பங்களிப்புக்கும் சமமான மகத்துவத்தை அரசு அளித்திருக்கிறது என்பதை அறிந்து எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

 2020ம் ஆண்டிலே அமல் செய்யப்பட்ட தேசிய கல்விக் கொள்கையின் பலன்கள் இப்போது வெளிப்பட்டு வருகின்றன. விண்வெளி ஆராய்ச்சித் துறையில் பாரதம், இதுவரை காணாத முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. விளையாட்டு உலகிலும் கூட, நமது தேசம் கடந்த பத்தாண்டுகளில் அதிக முன்னேற்றத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில் நடந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில், நமது அணியினர் மிகச்சிறப்பான முயற்சியை மேற்கொண்டனர். முப்படைகளைச் சேர்ந்த வீரர்களுக்கு என்னுடைய சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இவர்கள் தங்களுடைய உயிரை பணயம் வைத்து, நம்மையும், நாட்டையும் காக்கின்றனர்.

இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார். 

===

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க