tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஜூலை 28–

“மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் - காணொலி வாயிலாக 5 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

 மக்களுடன் முதல்வர் திட்டம் 18.12.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டு, பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சுமார் 2058 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் விரைவாக பரிசீலிக்கப்பட்டு உரிய பயன்கள் முறையாக பயனாளிகளுக்கு சென்று சேர்ந்துள்ளது. மேற்கண்ட முகாம்கள் வாயிலாக மொத்தம் 8.75 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

இதையடுத்து ஊரகப்பகுதிகளிலும் “மக்களுடன் முதல்வர்” திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் ஊராட்சியில் முதல்வர் துவக்கி வைத்தார். அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப்பகுதிகளில் 2,341 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டு, தற்போது வரை 861 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 

 “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வுகூட்டம் நடத்தினார். காணொலி வாயிலாக நாகப்பட்டினம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் மற்றும் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்து பயனாளிகளிடமும் கேட்டறிந்தார்.  

திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், , பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. முகாம் ஒன்றிற்கு சராசரியாக 900 மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் 77 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டு, 19 முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

 தூத்துக்குடி மாவட்டத்தில் 32 முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டு, 26,468 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 800 மனுக்கள் பெறப்படுகின்றன. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, மனை உட்பிரிவு பெயர் மாற்றம், சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், மின்சார இணைப்பு பெயர் மாற்றம் கோரி அதிகமாக மனுக்கள் வருவதாக கலெக்டர் லட்சுமிபதி கூறினார். 

 முகாம்களுக்கு வருகை தந்த பொதுமக்களிடமும் முதல்வர் கலந்துரையாடியனார். தூத்துக்கடி மாவட்டத்தில் பட்டா மாற்றம் கோரி விண்ணப்பித்த மதுபாலா, தனக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்யப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து முதலமைச்சர் கேட்டதற்கு, இத்திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமென்றும், தங்கள் பகுதி பெண்கள் இத்திட்டத்தால் மிகவும் பயனடைந்து வருவதாகவும், சிறப்பானதொரு ஆட்சி நடைபெற்று வருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் / வளர்ச்சி ஆணையர் 

 நா. முருகானந்தம், முதல்வரின் முகவரித்துறை சிறப்பு அலுவலர் / முதன்மைச் செயலாளர் அமுதா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க