tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திருப்பூர், மே 28-

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சி ஒட்டப்பாளையம் என்ற கிராமத்தில் ரோஸ் கார்டன் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு, இந்து, முஸ்லிம் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரோஸ்கார்டன் பகுதி வாழ் முஸ்லிம் ஜமாத் சார்பில் பள்ளிவாசல் கட்டி முஸ்லீம்கள் வழிபட்டு வருகின்றர்.

இந்நிலையில் அப்பகுதியில் வாழும் இந்து மக்களுக்கு விநாயகர் கோயில் கட்டுவதற்கு இடம் இல்லாத நிலையில், முஸ்லீம் மக்கள் ஜமாத்துக்கு சொந்தமான நிலத்தை இந்து மக்கள் அணுகினர்.

இதையடுத்து 3 சென்ட் நிலத்தை இந்துக்கள் கோயில் கட்டி வழிபட தானமாக கொடுக்க முஸ்லீம் மக்கள் முன் வந்தனர். இதையடுத்து உரிய முறையில் தானம் தரப்பட்டு தற்போது கோயில் பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட்டுள்ளது.

ஒற்றுமையாக வாழ்கிறோம்

இது குறித்து ரோஸ்கார்டன் முஸ்லீம் ஜமாத் அமைப்பினர் கூறும்போது, இங்கு நாங்கள் (முஸ்லீம் மக்கள்) வழிபட மசூதி உள்ளது.

ஆனால், இந்த சுற்றுவட்டார பகுதியில் கோயில் எங்கும் இல்லாததால், இந்த பகுதியில் வாழும் மக்கள் கோயிலுக்கு நெடுந்தூரம் செல்ல வேண்டியிருந்தது.

இந்நிலையில் இந்து மக்களின் சிரமத்தை போக்கும் வகையில், ஜமாத்துக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தை தானமாக வழங்கி இருக்கிறோம்.

ஏற்கெனவே இந்த பகுதியில் இந்துக்களும், முஸ்லிம்களும் மிக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.

ஏற்கெனவே ராம்ஜான் பண்டிகைக்கு விருந்து தருவோம். அதேபோல் தீபாவளி பண்டிகைக்கு அவர்களும் இனிப்பு உள்ளிட்டவை தந்து உபசரிப்பார்கள். இந்த பகுதி இந்து, முஸ்லீம் மக்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்து மக்கள் நெகிழ்ச்சி

இந்து மக்கள் கூறும்போது, “கடந்த 13 ஆண்டுகளாக இந்த பகுதியில் கோயில் இல்லை. தற்போது முஸ்லிம் ஜமாத் சார்பில் இடம் தானமாக வழங்கப்பட்டது.

எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயில் குடமுழுக்கு அன்று ஜமாத் சார்பில் முஸ்லிம்கள் பல்வேறு சீர், தட்டுகளுடன், மேளதாளம் முழங்க ஊர்வலம் வந்து அன்பை பகிர்ந்தனர். இது இருதரப்பிலும் நெகிழ்ச்சியை உண்டாக்கியது.

அதேபோல் குடமுழுக்கு நாளில் இந்துக்களும், முஸ்லிம்களும் சேர்ந்து மதிய விருந்து கோயில் வளாகத்தில் சாப்பிட்டோம். இது இருதரப்பு ஒற்றுமையை மற்றவர்களுக்கு பறைசாற்றும் வகையில் இருந்ததாக, குடமுழுக்கு நிகழ்வுக்கு வெளியூரில் இருந்து வந்தவர்கள் பலர் தெரிவித்தனர்". இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரது பாராட்டையும் வாழ்த்தையும் பெற்று வருகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க