tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஜூலை 26–

டெல்லியில் நேற்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்து பேசிய பின், நிருபர்களிடம் கூறியதாவது: 

 

புதிய ஆட்சி அமைந்துள்ளதால், ஏற்கனவே இருந்தவர் மாற்றப்பட்டு புதிய அமைச்சர் வந்துள்ளார். இவர்கள் இந்த விவகாரத்துக்கு புதியவர்கள்; நமக்கும் புதியவர்கள். அதனால், அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். மரியாதை நிமித்தமாக சந்திக்க வேண்டும். அதற்காக வந்தேன் என்றாலும், ‘நான் துரைமுருகன்... நலம்... நீங்கள் நலமா’ என்று கேட்பதை காட்டிலும், எங்களுடைய பிரச்னையை அவர்களிடம் கூற நினைத்தோம். 

 

காவிரி, கடல் ஆழம் கண்டவர் கூட தீர்வு காண முடியாத பிரச்னை. முல்லை பெரியாறு அணையும் பிரச்னை. இந்த பிரச்னைகளை தெளிவாகக் கூறினோம். எல்லாவற்றையும் அமைச்சர் கேட்டார். ஆனால், அவர் அளித்த பதில் தான் எங்களுக்கு எதுவும் புரியவில்லை. 

 

‘அச்சா அச்சா...’ என்று தான் பேசுகிறார். அருகிலிருந்த இணையமைச்சர் சோபண்ணாவும் இந்தி. பீஹாரைச் சேர்ந்த மற்றொரு இணையமைச்சரும் இந்தி. அப்புறம் எப்படி புரியும்? எனக்கு சளி பிடித்து இருப்பதால், நம் செயலர் தான் அனைத்தையும் விளக்கி பேசிக் கொண்டிருந்தார். இருப்பினும், நான், ‘கர்நாடகாவில் மழை பெய்ததால், இப்போதைக்கு பிரச்னை இல்லை. ஆனால், வரும் நாட்களில் தண்ணீர் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டால் வந்து விடுவேன்’ என்று மட்டும் கூறி வைத்தேன்.

 

நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின்படி, ஒரு ஆண்டு கூட தண்ணீர் தமிழகத்துக்கு வரவில்லை என்றேன். இணையமைச்சர் சோமண்ணா மட்டும், ‘உங்கள் நண்பர் தானே சித்தராமையா; அவரிடம் கேட்கலாமே’ என்றார். நானோ, ‘தாயும் பிள்ளையுமாக இருந்தாலும், வாயும் வயிறும் வேறு அல்லவா’ என்றேன்.

 

இந்த சந்திப்பில் பிரச்னைகளை நாங்கள் பேசினோம்; அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. மற்றபடி, வந்தோம்; சந்தித்து விட்டு செல்கிறோம். அவ்வளவு தான். மொத்தத்தில் சந்திப்பு திருப்திகரமாக இல்லை.

 

இவ்வாறு அவர் கூறினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க