tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

நாகர்கோவில், ஆக–

குமரியில் ஊராட்சிகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை வேறு பணிகளுக்கு பயன்படுத்த கூடாது என்று மத்தியமைச்சர் எல் முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.  

 மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புதுறை மத்திய அமைச்சர் எல்.முருகன் நாகர்கோவிலில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

உலகில் யாரும் தொடர்ச்சியாக ௩ முறை பிரதமாராக வந்தது கிடையாது. நேருக்கு பிறகு, மோடி ௩ முறை தொடர்ச்சியாக பிரதமராக ஆகியுள்ளார். ௨௦௪௭ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்காக அடிப்படை உள்கட்டமைப்புகளை வேகமாக செயல்படுத்தி வருகிறார். 

சமூக நீதி

சமூக நீதியை செயல்படுத்தவதில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். அதனால் தான், அமைச்சர் ஜிதேந்திர நாத் சிங்கை அழைத்து யுபிஎஸ்சியில் லேட்டர் என்ட்ரியை ரத்து செய்து, இடஒதுக்கீட்டை பின்பற்ற செய்துள்ளார். மோடியை இந்தியா மட்டுமல் உலக தலைவர்கள் விரும்பும் தலைவராக இருந்து வருகிறார். உலகம் வரவேற்கும் தலைவராக, உலக புகழ் பெற்ற தலைவராக மோடி இருந்து வருகிறார்.   

மேலும், மோடி பிரதமராக ஆட்சி பொறுப்பேற்றதும், ௩ கோடி பேருக்கு வீடு கட்டும் திட்டத்திற்கு ஒப்புதல், விவசாயிகளுக்கு உதவிதொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். மேலும், நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் இந்த ௪ பிரிவையும் உயர்த்துவது தான் இந்த அரசின் குறிக்கோளாக உள்ளது. 

குமரிக்கு நிதி

குமரி மாவட்டத்தில் ௧௫வது நிதிகுழு மானியத்தில் ஊராட்சிகளுக்கு கொடுக்கும் நிதி என்பது, பஞ்சாயத்து குடிநீர், உள்கட்டமைப்பு, ரோடு வசதி, மின்சார வசதிக்காக மக்கள் தொகையை பொறுத்து மத்திய அரசு ஒதுக்கி வருகிறது. குமரி மாவட்டத்தில் இந்த நிதியை வேறு பணிகளுக்கு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இந்த தொகையை வேறு பணிகளுக்கு பயன்படுத்த கூடாது. அந்தந்த ஊராட்சிகளுக்கு இந்த நிதியை செலவு செய்ய வேண்டும். 

மத்தியரசின் சுகாதாரத்துறை, அனைத்து மாநிலத்திலும் மருத்துவர்கள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும், மருத்துவர்கள் தாக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மத்திய அரசு மருத்துவர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. 

சட்டம் ஒழுங்கு

சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கையில் உள்ளது. அந்தந்த மாநில அரசுகள் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து நமக்கு சேவை செய்யும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை. ஏற்கனவே ஐபிசியில் பல சட்டங்கள் உள்ளன. புதிய சட்டம் வந்துள்ளது. அதில் மருத்துவர்களை பாதுகாக்க சட்டம் உள்ளது. மருத்துவர்களை பாதுகாக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

 

பாக்ஸ்...

______

கொடுக்கல், வாங்கல் தான் கூட்டணி

 

*பாஜ ௪ எம்எல்ஏக்கள் அதிமுக போட்ட பிச்சை என முன்னள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பற்றி உங்கள் கருத்து என்ன? 

 இதற்கு எங்கள் மாநில தலைவர் தெளிவாக பதில் அளித்துள்ளார். கூட்டணி என்றால் கொடுக்கல் வாங்கல். அவர்கள் மாநிலம் முழுவதும் எங்கள் வாக்கை வாங்கியுள்ளனர். எங்களின் வாக்கினால் தான் எதிர் கட்சி அந்தஸ்தை அடைந்துள்ளனர் என்றார் முருகன். 

* நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கிறாரே..

  நமது நாடு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். மக்களுக்கு சேவை செய்யலாம். நடிகர் விஜய் கட்சி கொடியை வெளியிட்டுள்ளார். அவர்களை வரவேற்கிறோம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை, கோட்பாடு உள்ளது. அந்த கோட்பாட்டின் அடிப்படையில் அவர் கொடியை வடிவமைத்திருக்கலாம். அது அவர் கட்சியில் சம்பந்தப்பட்ட விஷயம் என்று முருகன் கூறினார்.   

______

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க