tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஆக. 20–

கருணாநிதி நாணயம் வெ ளியீட்டு விழா நடத்தியது மத்தியஅரசு. அதனால் மத்தியஅமைச்சரை அழைத்து விழா நடத்தினோம். இதில் பழனிசாமிக்கு எங்கே வலிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி விடுத்தார்.

 சென்னையில், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநில மீனவர் அணி துணைத் தலைவருமான கே.பி.சங்கர் மகன் திலீபன் – விஷாலி ஆகியோரது திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று நடத்தி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:  

  வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறையாக, எத்தனை சோதனை வந்தாலும், எத்தனை கொடுமைகள் வந்தாலும், எவ்வளவு அநியாயங்கள், அட்டூழியங்கள் வந்தாலும், அதையெல்லாம் எதிர்த்துப் போராடி, இந்த திருவொற்றியூர் பகுதியில் கழகம் வளர்வதற்கு பாடுபட்ட உன்னதமான ஒரு தியாகியாக வலம் வந்தவர்தான் நம்முடைய பரசுராமன். அந்தக் குடும்பத்தில் நடைபெறக்கூடிய விழா இது. 

  நுாற்றாண்டு விழா

கடந்த ஓராண்டு காலமாக முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை அரசு சார்பிலும், கட்சியின் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் மகுடம் வைப்பதுபோல், நேற்றைய தினம் நடந்த நிகழ்ச்சி, நாணயம் வெளியீடு விழா. ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை தந்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, கலைஞர் நினைவிடத்தை போய் பார்க்கவேண்டும் என்று நாங்கள் கூட கேட்கவில்லை, பார்த்தே தீரவேண்டும் என்று அவரே கேட்டு, முழுமையாக அத்தனையும் பார்த்துவிட்டு இதுமாதிரி எங்கேயும் பார்த்ததில்லை என்று பாராட்டிவிட்டுச் சென்றார்.

அரசியல் தெரியுமா?

 இதை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்றொருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார். அவர் நேற்று பேட்டி கொடுக்கிறார். என்னவென்றால், நாணயம் வெளியிடுகிறார்கள். இந்தியில் இருக்கிறது. தமிழில் இல்லை. தமிழ், தமிழ் என்று முழங்குகிறார்களே, இந்தியில் இருக்கிறது என்று சொல்கிறார். முதலில் அரசியல் தெரிந்திருக்கவேண்டும். நாட்டின் நடப்பு புரிந்திருக்கவேண்டும். அந்த நிகழ்ச்சி எப்படி நடக்கிறது என்றால், ஒன்றிய அரசு அனுமதி கொடுத்து ஒன்றிய அரசின் மூலமாக நடைபெறக்கூடிய நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி. 

 ஏற்கனவே, பலபேருக்கு நாணயங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. மறைந்த எம்.ஜி.ஆருக்கு நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதைபோல பேரறிஞர் அண்ணாவுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த நாணயத்தை எல்லாம் ஒருவேளை பார்த்திருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். அதை எடுத்து பாருங்கள். அனைத்து தலைவர்களுக்கும் நாணயம் வெளியிடுகிறபோது ஒன்றிய அரசு இந்தியில்தான் எழுதி, அதன்பிறகு ஆங்கிலத்தில் எழுத்துக்கள் அமைந்திருக்கும்.

ஆனால் அண்ணாவுக்கு நாணயத்தை வெளியிடுகிறபோது தலைவர் கலைஞர் என்ன செய்தார் என்றால், யாரும் செய்யாத ஒரு அதிசயத்தை செய்தார். அண்ணா அவர்களின் தமிழ் கையெழுத்து அதில் இடம்பெறச் செய்யவேண்டும் என்று சொல்லி, அண்ணாவின் தமிழ் கையெழுத்து நாணயத்தில் பொறிக்கப்பட்டு அதற்கு பிறகுதான் அது வெளியிடப்பட்டது. 

நமக்கு வாய்த்தவர்

அதுபோலதான், தலைவர் கலைஞர் நாணயத்தை வெளியிடுகின்றபோது கலைஞருக்கு மிகவும் பிடித்த ‘தமிழ் வெல்லும்’, பெரும்பாலும் அவர் தமிழில் கையெழுத்து இடுகிறபோது பெரும்பாலும், ‘தமிழ் வெல்லும், தமிழ் வெல்லும்’ என்று சொல்லித்தான் கையெழுத்திடுவார். இல்லையென்றால், ‘அண்ணா வாழ்க, அண்ணா புகழ் ஓங்குக, பெரியார் வாழ்க’ என்று சொல்லிதான் கையெழுத்திடுவார். ஆகவே, தமிழ் வெல்லும் என்பது தமிழில்தான் எழுதப்பட்டிருக்கிறது. இதைக்கூட அவர் பார்க்காமல், புரிந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ளாமல், இப்படி ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நமக்கு வாய்த்திருக்கிறார் என்றுதான் வருத்தமாக இருக்கிறது. 

மத்தியஅரசு விழா

 கேட்கிறார்... “ஏன் ராகுல் காந்தியை அழைக்கவில்லை?” அய்யா எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, கலைஞருக்கு நாணயம் வெளியிடுவது ஒன்றிய அரசு. அதனால் ஒன்றிய அமைச்சரை அழைத்து அந்த நிகழ்ச்சியை நாங்கள் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறோம். இதில் பழனிசாமிக்கு எங்கே வலிக்கிறது? அதைத்தான் நான் கேட்கிறேன்.

மரியாதை அவ்வளவுதான்..

எம்.ஜி.ஆருக்கு நாணயம் வெளியிட்டார்கள். யார் வெளியிட்டார்கள் தெரியுமா? ஒன்றியத்தில் இருந்து யாரும் வரவில்லை. எடப்பாடி பழனிசாமியே வெளியிட்டார். ஏனென்றால், ஒன்றிய அரசு அவரை மதிக்கவில்லை. அவரை ஒரு முதலமைச்சராகவே நினைக்கவில்லை. வர மறுத்துவிட்டார்கள். இதுதான் அவருக்கு இருந்த மரியாதை. 

 இன்றைக்கு நாம் அழைத்த அடுத்த விநாடி ஒரு சொல்கூட தட்டாமல், ஒரு 15 நிமிடம், 30 நிமிடத்திற்கு நடத்திவிட்டு போகவேண்டும் என்று சொன்னதற்கு, 15 நிமிடம் என்ன? எவ்வளவு நேரம் இருந்தாலும் காத்திருந்து அந்த நிகழ்ச்சியை நடத்திவிட்டு போகிறேன் என்று சொல்லிக் கொண்டு வந்தார். அதுதான் திமுக-விற்கு இருக்கக்கூடிய பெருமை; கலைஞருக்கு இருக்கக்கூடிய சிறப்பு. 

இரங்கல்கூட்டம் உண்டா?

இன்னும் ஒன்றை சொல்லவேண்டுமென்றால், அம்மா, அம்மா என்று புகழ்ந்து கொண்டு இருக்கிறார்களே அதிமுக-வினர், பாக்கெட்டில் படத்தை வைத்துக் கொண்டு பூஜை செய்து கொண்டிருக்கிறார்களே, அந்த அம்மையார் இறந்து எத்தனை வருடங்கள் ஆகிறது? நான் கேட்கிறேன், இதுவரைக்கும் அந்த அம்மையாரால் வளர்க்கப்பட்டவர்கள், உருவாக்கப்பட்டவர்கள் ஒரு இரங்கல் கூட்டமாவது நடத்தியிருக்கிறார்களா? ஒரு இரங்கல் கூட்டத்தை நடத்துவதற்கு கூட யோக்கியதை அற்றவர்கள், கலைஞர் விழாவை பார்த்து விமர்சனம் செய்வதற்கு உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றுதான் நான் கேட்கிறேன். 

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க