tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

ஸ்ரீநகர், அக். 12–

பத்து ஆண்டுகள் கழித்து ஜம்மு- காஷ்மீரில் நடந்த தேர்தலில் தேசியமாநாடு– காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. புதிய முதல்வராக உமர் அப்துல்லா பதவி ஏற்கிறார். மத்திய அரசுடன் மோதல்போக்கை கடைப்பிடிக்க மாட்டேன் என்று உமர் கூறினார்.

 ஜம்மு காஷ்மீரில் நடந்த சட்டசபைத் தேர்தலில் தேசிய மாநாடு– -காங்கிரஸ் கூட்டணி 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. புதிய முதல்வராக உமர் அப்துல்லா பதவி ஏற்கிறார்.அவரது கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் உமர் தேர்வு செய்யப்பட்டார். துணை நிலை ஆளுநரை இன்று தேசிய மாநாடுமற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகின்றனர். நாளை அல்லது ௧௪ம் தேதி புதிய அரசு பதவி ஏற்கும் என்று தெரிகிறது.

 இதற்கிடையில் உமர் அப்துல்லா தனியார்டிவிக்கு அளித்த பேட்டி வருமாறு:

 இது ஒரு முழுமையான அரசல்ல. ஆனால், இதற்கு அதிகாரம் இல்லை என்பதல்ல. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான அதிகாரப்பட்டியல் பெரியதாக இருந்தது. ஆனால் மிகவும் முக்கியமாக இது ஒரு தற்காலிக அடிப்படையிலானது. பிரதமர் (நரேந்திர மோடி) மற்றும் இதர மத்திய அரசின் மூத்த தலைவர்கள் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து தரப்படும் என்று கூறியிருக்கின்றனர். எனவே மிகவிரைவில் அது நடக்கும் என்று நாம் நம்புவோம்.  

 மத்திய அரசுடன் மோதல் போக்கான அரசாக இருக்காது பொறுத்திருந்து பாருங்கள். அதே போன்றதொரு போக்கை டெல்லியில் இருந்தும் எதிர்பார்க்கின்றேன். மோதலோடு இருப்பதை நாங்கள் எதிர்நோக்கவில்லை. மோதல் போக்கு என்பது ஜம்மு-காஷ்மீர் மக்களின் நலனுக்கானது என்று நான் நம்பவில்லை. மோதல் போக்குடன் நடந்து கொள்வதற்கு அவர்கள் வாக்களிக்கவில்லை. பிரச்னைகள் தீர வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களித்திருக்கின்றனர். மோதல் போக்கான சூழலில் அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியாது.

  இந்த அரசுக்கு ஆதரவாக ஓட்டுப்போட்டவர்களுக்கு மட்டும் இந்த அரசு சொந்தமானதல்ல. இது எல்லோருக்குமான அரசு. பிரதமர் மோடிக்கு 140 கோடி மக்களும் ஓட்டுப்போடவில்லை. ஆனால், அவர்தான் இந்தியாவின் பிரதமர். ஆகவே, 1.4 கோடி மக்கள் ஜம்மு-காஷ்மீரில் இந்த கூட்டணிக்கு வாக்களிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், இந்த அரசு ஜம்மு -காஷ்மீர் மக்களின் ஒவ்வொருக்குமான அரசாகும்.

  டெல்லியுடன், காஷ்மீரை ஒப்பிட முடியாது. டெல்லி ஒரு போதும் மாநிலமாக இருந்ததில்லை. அது ஒரு இருவிதமான மாதிரி. யூனியன் பிரதேசம் மட்டுமின்றி டெல்லி, நாட்டின் தலைநகர். ஜம்மு-காஷ்மீர் தலைநகர் அல்ல. நாங்கள் மாநிலமாக இருந்திருக்கின்றோம். மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று எங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. எங்களுடைய தனித்தன்மையான நிலையில் நாங்கள் இருக்கின்றோம். எப்படிப் போகிது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க