tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி,ஜூலை 16

மனித பிறவியிலேயே மிக மோசமான நடத்தை கொண்டவராக சவுக்கு சங்கரை பார்க்கிறோம்.அவரை மன்னிக்கவே முடியாது என்று உச்சநீதிமன்றம்கண்டனம் தெரிவித்துள்ளது.

 

யூ டியூபர் சவுக்கு சங்கர், பல தரப்பினரையும் வசை பாடி வீடியோ வெளியிடுவது வழக்கம். தனக்கே எல் லாம்தெரியும் என்ற பாணியில் யாரையும் ஒருமை யில் பேசி குற்றச்சாட்டுக்களை அடுக்குவது உண்டு. இந்த நிலையில் அவர் பேட்டி ஒன்றில், தமிழக பெண் போலீசார் பற்றி இழிவாக விமர்சித்து பேசியிருந்தது பெரும் சர்ச்சையானது. இதனால் சவுக்கு சங்கர் மீது பெண் போலீசார் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். அதன்பேரில் சங்கரை தமிழக போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாகவும் வழக்கு தொடரப்பட்டது. அத்துடன் கோவை உள்ளிட்ட பல மாவட்ட காவல் நிலையங்களில் அடுத்தடுத்து சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பாய்ந்தன. இதனால் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

மேல்முறையீடு

 சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்தினர். அதாவது இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட்டார். ஆனால் நீதிபதி பாலாஜியோ, அரசு பதிலளிக்க அவகாசம் வழங்க உத்தரவிட்டார். இதனால் மூன்றாவது நீதிபதியாக ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்தார். இந்த விசாரணையின் போது, ஆட்கொணர்வு மனுக்களை மீண்டும் 2 நீதிபதிகள் பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக சவுக்கு சங்கரின் தாயார் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார்.

 இந்த மனு மீது சில நாட்களுக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி எம்.சுந்தரேஷ் இந்த விசாரணையில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி சுதன் துலியா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “எல்லை மீறிய பேச்சு, நடத்தையால் எல்லா விதமான எல்லைகளையும் தாண்டும் வகையில் சவுக்கு சங்கர் நடந்து கொண்டுள்ளார். ஏன் இப்படி ஒழுக்கமற்ற முறையில் சவுக்கு சங்கர் பேசியுள்ளார், நடந்துகொண்டார் என்று எங்களுக்கு தெரியவில்லை? அவர் இப்படி சமூக வலைதளம், ஊடகம் மூலம் கொதித்துக்கொண்டே இருக்க என்ன காரணம்-? அவரை கொஞ்சம் அமைதியாக இருக்க சொல்லுங்கள். உயர்நீதிமன்றத்தில் கூட கண்ணியமான முறையில் சவுக்கு சங்கர் நடந்துகொள்ளவில்லை என்பது தெரிகிறது என்று அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

 மேலும் “சவுக்கு சங்கர் தடுப்பு காவலில் வைக்கப்படக்கூடிய அளவிற்கு அவர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தாரா? நீங்கள் மிகக் கடுமையாக அவரிடம் நடந்து கொள்ள முடியாது. சவுக்கு சங்கரின் நடத்தையும் மன்னிக்க முடியாத ஒன்றுதான். இருப்பினும் ஏன் இடைக்கால நிவாரணத்தை வழங்கக் கூடாது?” என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசு பதில்

இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, “அவர் இதுபோன்று செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாகவே கொண்டுள்ளார். மேலும் தற்போது பெண் போலீஸ் அதிகாரிகள் மீது அவதூறுகளையும, குற்றச்சாட்டுகளை கூறி பேட்டியும் அளித்துள்ளார். அது என்னென்ன வார்த்தைகள் என்பதை இந்த நீதிமன்றத்தில் கூற விரும்பவில்லை” என கூறினார். இதனையடுத்து மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சவுக்கு சங்கருக்கு எதிரான கருத்துகளை உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ள நிலையில், அவர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்தாவது கேள்விகுறியாகியுள்ளது.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க