tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, அக். 6–

 

‘‘மழை காலத்தில் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் அளவில் பயன்படுத்த, ‘ஒயர்லஸ் போன்’ வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்,’’ என, துணை முதல்வர் உதயநிதி கூறினார்.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வடகிழக்கு பருவ மழையையொட்டி எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. இதில், உதயநிதி பேசியதாவது:

 

வடகிழக்கு பருவமழை, இன்னும் ஓரிரு வாரங்களில் துவங்க உள்ளது. அதனால், மழை நீர் வடிகால் பணி, மின் வாரிய கேபிள்கள் அமைக்கும் பணி, குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி என, ஏற்கனவே செய்து வரும் பணிகளை, விரைவாக முடிக்க வேண்டும்.

 

மழை காலங்களில் அதிகமாக தண்ணீர் தேங்கும் பகுதிகளின் பட்டியல், வார்டு வாரியாக உள்ளன. அதனால், மோட்டார் பம்புகள், படகுகள் போன்றவற்றை, ஒரே இடத்தில் வைக்காமல், அந்தந்த வார்டுகளுக்கு இப்போதே வழங்கி, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

 

மழை நீர் அதிகம் தேங்கும் இடம் அருகிலேயே, சமையற்கூடங்கள் அமைத்தால், மக்களுக்கு உரிய நேரத்தில், நம்மால் உணவு வழங்க முடியும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால் பாக்கெட்டுகள் வழங்க, கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கேட்கும் அளவுக்கு வழங்கப்பட வேண்டும். ஒரு வார்டுக்கு குறைந்தபட்சம் 1,000 பால் பாக்கெட்டுகள், ரொட்டி பாக்கெட்டுகள் என்ற அளவில் வழங்க, தயாராக இருக்க வேண்டும். 

 

கடந்த ஆண்டு மழையின் போது, பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மொபைல் போன்களும் செயல்படவில்லை. நிவாரண பணிகளை செய்ய, ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. எனவே, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் அளவில் பயன்படுத்த, ஒயர்லெஸ் போன்கள் வழங்கலாமா என்பது குறித்து ஆராய வேண்டும். 

 

தாழ்வான பகுதிகளில் உள்ள மின்சார பெட்டிகளை உயர்த்தி வைக்க வேண்டும். மழை நீர் சூழ்ந்துள்ள ஒட்டுமொத்த பகுதியும், இருளில் மூழ்கும் போது, வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்காவிட்டாலும், ஜெனரேட்டர் வழியாக பிரதான சாலைகளிலும், இணைப்பு சாலைகளிலும், விளக்குகளை எரிய விடும்படி, பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

சிதிலமடைந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், பழமையான சுனாமி குடியிருப்புகள் போன்றவற்றில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும்.

 

இவ்வாறு அவர் கூறினார்.

 

கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், செந்தில் பாலாஜி, சுப்பிரமணியன், சேகர்பாபு, நாசர், சென்னை மேயர் பிரியா பங்கேற்றனர்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க