tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மதுரை, மே. 24

மழையால் பாதிக்கப்ப ட்டவர்களை கணக்கெடுத்து அரசு விரைவாக நிவாரண இழப்பீடு வழங்க ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள்விடுத்தார்.

தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.கோடை மழை தற்போது வரை 16 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் கனமழை பதிவாகி மதுரை, கன்னியாகுமரி திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் மே 22 வரையிலான காலகட்டத்தில் இயல்பை விட அதிகமான மழை பதிவாகியுள்ளது. வெள்ளம் ஏற்பட்டு விளை பொருள்கள் நீரில் மூழ்கி வீணாகி உள்ளது சேதம் அடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்க உடனடி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்துவதற்கு உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆகவே இந்த கணக்கெடுப்பு முடிந்து உடனடியாக காலத்தால் செய்த உதவி என்ற அடிப்படையிலே இந்த பயிர்கள் சேதம் அடைந்து உயிராக வளர்க்கப்பட்ட பயிர்கள் எல்லாம் வீணாகி கண்ணீரிலே இன்றைக்கு விவசாயிகள் இந்த அரசு நேசக்கரமிட்டுமா என்று கண்ணீரோடு காத்திருக்கிறார்கள். அவகளுடைய கண்ணீரை துடைப்பதற்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி இருக்கிற காரணத்தினாலே முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏறத்தாழ 7 லட்சம் விவசாயி குடும்பங்களும் 80 லட்சம் மக்களும் பாசனத்திற்கும் குடிநீருக்கும் நம்பி உள்ளனர். அந்த முல்லை பெரியார் வரலாறு எல்லோரும் அறிந்து ஒன்றுதான் இருந்தபோதும் தற்போது நான் அதை நினைவு கூறுகிறேன் 1979 முன்பாக 2.31லட்சம் ஏக்கர் பாசன பரப்பு இருந்தது.கேரளா அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக 136 அடியாக குறைக்கப்பட்ட பின் தற்போது பாசனத்திற்கு பரப்பு 1.71 லட்சமாக குறைந்து விட்டது.

இதனால் விவசாயிகள் பாதிப்படைந்தனர் அதற்காகத்தான் நிரந்தர தீர்வுகாண வரலாற்று சிறப்புமிக்க உரிமை மீட்பு போராட்டத்தை சட்ட போராட்டத்தின் மூலம் மீட்டு தந்த ஜெயலலிதாவுக்கு நன்றி அறிவிப்பு என்கின்ற ஒரு மகத்தான அந்த சரித்திர சாதனை நிகழ்த்திய மதுரையில் நடைபெற்றது. 20.11.2014 ஜெயலலிதா பெற்ற தீர்ப்பில் அணையின் நீரை 142 அடியாக தேக்கி கொள்ளலாம். பேபி அணையை பழுது பார்க்கப்பட்டது 152 அடியாக தேக்கிக் கொள்ளலாம் என்று தீர்ப்பை பெற்று மூன்று முறை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 142 அடியாக தேக்கி அணை பாதுகாப்பாக என்று உறுதி செய்யப்பட்டது

இதனைத் தொடர்ந்து முல்லைப் பெரியாரில் 1500 கோடியில் புதிய அணை கட்ட கேரளா அரசு திட்டம் தயாரித்த போது இதன் மூலம் நமது ஜீவாதார உரிமை பறிபோகும் அதே போல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று 5 மாவட்ட மக்களின் சார்பில் தொடர்ந்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் உண்ணாவிரதம் நடைபெற்றன. ஆனாலும் நமது உரிமை பறிபோகிறது. அரசு கள்ள மவுனதுடன் இருக்கிறது. இந்த மர்மத்தின் விடை எப்போது உலகம் அறியும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அமராவதி பிரச்சனை, பாலாறு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எடப்பாடியாரும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். எந்த அளவுக்கு இந்தப் பிரச்சனைக்கு முக்கியத்துவம் காட்டுகிறார்கள் என்பதை அந்த பதிவிலே நாம் அறிகிற போது இதை நீர்வளத்துறை அமைச்சர் எப்போதும் போல இதை நகைச்சுவையாக பதில் சொல்லிக் கடந்து செல்கிறார்.

நாட்டு மக்களுடைய ஜீவாதார உரிமை பிரச்சினைகளை மிகுந்த அக்கறையோடு கவனத்தோடு கையாள வேண்டும். உரிமை நிலை நாட்ட வேண்டும் என்றுதான் மக்கள் கேட்கின்றார்கள். ஆகவே இந்த கோடை மழையிலே இதுவரை 12 பேர் உயிரிழந்தவர்கள் என்று அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தி ருக்கிறார்கள். அதேபோல கால்நடைகள், பயிர்கள் சேதாரம் ஏற்பட்டிருக்கின்றது. போர்க்கால அடிப்படையிலே இந்த மானியங்களை, நிவார நிதிகளை, இழப்பீடுகளை தர வேண்டும். முல்லை பெரியாரில் மௌனம் சாதித்து வரும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டு மக்கள் குரல் வேதனைகுரலாக கேட்டுக் கொண்டிருப்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மட்டும் கேட்கவில்லையா? என கேள்வி எழுப்பினார்.

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க