tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திருநெல்வேலி, ஆக. 10–

பள்ளிகளில் மாணவர்களுக்கு இடையே ஏற்படுகிற பிரச்னை, சாதிய சண்டை அல்ல.அதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தினார்.

தமிழக அரசின் 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்று உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

 திருநெல்வேலி பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்து மாணவர்களுக்கு வங்கி ஏடிஎம் கார்டை வழங்கினார். திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 6,361 மாணவர்கள் முதல் கட்டமாக இத்திட்டத்தில் பயன்பெறுவார்கள் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் சபாநாயகர் பேட்டி அளித்தார். அது வருமாறு:

 * மாணவர்களிடையே மோதல் அதிகரிக்கிறதே?

பதில்: பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் இடையே சின்ன, சின்ன பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். ராதாபுரத்தில் ஒரு பள்ளியில் பிரச்னை செய்த மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தபோது மாணவர்களின் பெற்றோர், 'எங்கள் பிள்ளைகள் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள், இன்று சண்டை போட்டால் நாளை சேர்ந்து கொள்வார்கள்; எனவே ஏன் பெரிதுப்படுத்துகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினர். இதுபோன்ற விஷயத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். நமது மாவட்டத்தில் எங்கேயும் சாதிய ரீதியான சண்டை இல்லை. அப்படி இல்லாததால் பள்ளியில் குழந்தைகள் சண்டை போடுவதை பெரிதாக்க பார்க்கிறார்கள். மாணவர்கள் பிரச்னையில் காவல்துறையோ, மாவட்ட நிர்வாகமோ தலையிடக்கூடாது. தலைமை ஆசிரியர் தான் முடிவுடுக்க வேண்டும்.

 பள்ளியில் நடந்த சம்பவங்களை அவர்களே முடிவெடுத்து கொள்வார்கள். பள்ளிக்கு வெளியே வேறு நோக்கத்தோடு பிரச்னை நடந்தால் அதில் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் தலையிடலாம். ஆசிரியர்கள் தான் குழந்தைகளை அரவணைத்துச் செல்ல முடியும். தவறுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர் மாணவர்களை தண்டிக்கலாம், இடைநீக்கம் செய்யலாம், நிரந்தரமாகவும் நீக்கலாம்.

* அதிமுக நிர்வாகி தொடுத்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி உங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறதே?

பதில்: காவல்துறை அழைத்தால் விசாரணைக்கு செல்வேன். நீதிமன்றத்திற்கு சென்றால் சட்டப்படி ஆஜராகி எனது தரப்பு நியாயத்தை தெரிவிப்பேன்; அதில் ஒன்றும் வருத்தமில்லை. இது நம்ம நாடு, நமது சட்டம். நமது மக்கள், நமது ஜனநாயகம்; அப்பாவுக்கும் ஒன்று தான், உங்களுக்கும் ஒன்றுதான். எல்லோருக்கும் சமமானது சட்டம். எனவே சட்டத்தை மதித்து நடப்பேன்.

இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.

++

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க