tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, செப்.6–

`மாநில முதல்வர்கள் ஒன்றும் அரசர்கள் அல்ல.. பழைய காலத்து அரசர்களைப் போல ஆணையிட்டால் செய்யப்பட வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது, நாம் நிலப்பிரபுத்துவ காலத்தில் இல்லை" 

 என்று - உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

 கார்பெட் புலிகள் காப்பகத்தின் முன்னாள் இயக்குநரான ஐஎப்எஸ் அதிகாரி ராகுல், உத்தரகாண்ட் மாநிலத்தின் ராஜாஜி புலிகள் காப்பகத்தின் இயக்குநராக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியால் நியமிக்கப்பட்டார்.

 

இந்த நியமனம் அந்த மாநில வனத்துறை அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டோரின் கருத்துகளைப் புறக்கணித்து, அவர்களின் அதிருப்திக்கு மத்தியில் நிகழ்ந்ததாக தெரிகிறது. 

 இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே.மிஸ்ரா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.என்.எஸ் நட்கர்னி, ``பணி நியமன ஆணை செப்டம்பர் 3-ம் தேதி வாபஸ் பெறப்பட்டது" எனக் குறிப்பிட்டார். அதற்கு நீதிபதிகள், ``அவர் மீது ஏற்கெனவே, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது, அவருக்கு எப்படி பணி ஆணை வழங்கப்பட்டது?" என கேள்வி எழுப்பினர். இதற்கும் பதிலளித்த அரசு தரப்பு, அந்த அரசு அதிகாரி கட்டம் கட்டப்பட்டு, குறிவைக்கப்படுகிறார்" எனக் குறிப்பிட்டார்.

 

 

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், ``ஒரு நிர்வாகத் தலைவர் என்ன சொன்னாலும் அதற்கு கீழே இருப்பவர்கள் அதை அப்படியே செய்வார்கள் என்ற ஒரு நம்பிக்கை இந்த நாட்டில் இருக்கிறது. மாநில முதல்வர்கள் ஒன்றும் அரசர்கள் அல்ல.. பழைய காலத்து அரசர்களைப் போல ஆணையிட்டால் செய்யப்பட வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது... நாம் நிலப்பிரபுத்துவ காலத்தில் இல்லை... முதல்வர் என்பதால் எதுவும் செய்யலாமா? அந்த அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை நிலுவையில் இருப்பதைக் கவனித்தும், அந்த அதிகாரி மீது முதல்வர் ஏன் சிறப்பு கவனம் வைத்திருக்கிறார்? அந்த அதிகாரியை ராஜாஜி புலிகள் காப்பகத்தில் பணியமர்த்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளதை முதல்வர் ஏன் புறக்கணிக்கிறார்.முதல்வரின் ஆதரவு இருப்பதை கவனித்துதான், இதற்கு துணை செயலாளர், முதன்மை செயலாளர், மாநில வனத்துறை அமைச்சர் ஆகியோர் இந்த நியமனத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். அந்த அதிகாரி மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்றால் அவர் மீது ஏன் துறை ரீதியான நடவடிக்கை எடுத்தீர்கள்...?" என சரமாரியாக கேள்வி எழுப்பினர். 

++

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க