tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஜூலை 25

இரண்டைத் தவிர பிற மாநிலங்களை மத்திய பட்ஜெட்டில் புறக்கணிப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. 

மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் தவிர பிற மாநிலங்களை புறக்கணித்தது தொடர்பாக விவாதிக்க, இதர அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்தன. பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் தவிர வேறு மாநிலங்களின் பெயர்களே இடம் பெறவில்லை. இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பட்ஜெட் அல்ல. இந்த பாரபட்ச போக்கினை இண்டியா கூட்டணி கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் கார் கே குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளிக்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவைத்தலைவர் அழைத்தார். அப்போது எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். 

பின்னர் நிதி அமைச்சர் நிர்மலா, பதில் அளிக்கையில், இடைக்கால பட்ஜெட்டிலும், முழு பட்ஜெட்டிலும் எல்லா மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிடவில்லை. அதற்காக மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக அர்த்தம் இல்லை. அந்த மாநிலங்களில் அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று பொருள் இல்லை. மகாராஷ்டிரா பெயர் இடம்பெறவில்லை. ஆனால் அந்த மாநிலத்துக்கு 76,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பல முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள பல மாநிலங்களின் பெயர்களையும் என்னால் சொல்ல முடியும். மற்ற மாநிலங்களுக்கு எதுவுமே செய்ய வில்லை என்ற மனநிலையை மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகள் உருவாக்குகின்றன. காங்கிரஸ் ஆட்சி பட்ஜெட்டுகளில் கூட மாநிலங்களை தனித்தனியாக பெயரிட வில்லை. அரசின் மீது பழி சுமத்தும் முயற்சியே இது. இதை ஏற்க முடியாது என்றார், 

அப்போது எதிர்க்கட்சியினர் மீண்டும் உள்ளே வந்தனர். தொடர்ந்து பேசிய நிர்மலா, மே. வங்கத்துக்கு கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் மோடி அறிவித்த பல திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். இதற்கு திரிணாமுல் எம். பி. க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குழப்பம் ஏற்பட்டது. உடனே அவைத்தலைவர் குறுக்கிட்டு, பட்ஜெட் பற்றி இருபது மணி நேரம் விவாதிக்கலாம். அதில் உங்கள் கருத்துக்களை கூறலாம் என்று பிரச்சினை க்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க