tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஜூலை 2–

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மாநிலங்களவையில் நேற்றுவிவாதம் நடந்தது.

 இதில் எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது:

 எனக்கு கால்வலி இருப்பதால் நீண்ட நேரம் நின்று கொண்டு பேச முடியாது.

அவைத்தலைவர்தன்கர்: நீங்கள் அமர்ந்து கொண்டே பேசலாம்.

கார்கே: அவைத்தலைவர் அனுமதித்தால் மட்டுமே அமர்ந்து பேசுவேன். 

தன்கர்: அவையில் பேசும் போது உங்கள் சவுகரியத்தை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். நிற்க முடியாத நிலை என்றாலோ வலி என்றாலோ, அமர்ந்து கொண்டு பேசுவது தொடர்பாக நீங்களே முடிவு செய்யலாம்.

கார்கே: அவையில், நின்று கொண்டு பேசுவதை ஒப்பிடும் போது அமர்ந்து கொண்டே பேசினால் பேச்சு உணர்வுப்பூர்வமாக இருக்காது.

தன்கர்: அமர்ந்து கொண்டு பேசினால் சுத்தமாக உணர்வுப்பூர்வமாக பேச்சு இருக்காது. கார்கே ஜி உங்களுக்கு இந்த விஷயத்தில் நான் உதவி செய்கிறேன். உணர்வுப்பூர்வமாக இருப்பதை நான் உயிர்ப்புடன் வைத்து இருக்கிறேன். 

 கார்கே: 'சில நேரங்களில் எங்களுக்கு நீங்கள் உதவி செய்து கொண்டே இருக்கிறீர்கள். உங்களையும் நினைவில் வைத்து இருக்கிறோம். என்னை விவாதத்தில் பங்கேற்க அனுமதித்த அவைத் தலைவருக்கு நன்றி.

 ( இப்படி ருசிகர உரையாடல் தொடர்ந்ததும் அவையில் உறுப்பினர்கள் சிரிக்க தொடங்கினர்.)

 ஏன் உறுப்பினர்கள் அனைவரும் சிரிக்கிறார்கள். இப்படித்தான் அவர்கள் திரித்து விடுகிறார்கள்.(மீண்டும் சிரிப்பு) மாநிலங்களவைத் தலைவரும் என்னை தவறாக வழி நடத்துகிறார். 

தன்கர்: இதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடலாம். நானும் அதையே செய்கிறேன்.

இவ்வாறு உரையாடல் நடந்தது.

 இரு தினங்களுக்கு முன்பு மாநிலங்களவையின் மையப்பகுதியில்சென்று முறையிட்டகார்கேவுக்கு தன்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் இப்படி நடந்து கொள்வது ஒரு கறை' எனவும் கூறியிருந்தார்.ஆனால் நேற்று இருவரும் சகஜமாகி மாறி பேசிக்கொண்டதுகுறிப்பிடத்தக்கது.

++

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க