tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மாலே: மாலத்தீவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில் அதிபராக இருக்கும் முய்சு கட்சி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை மிக எளிதாக வென்றது. இதன் பிறகு முய்சுவால் எளிதாக விரும்பிய சட்டங்களைக் கொண்டு வர முடியும்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு தான் மாலத்தீவு.. அங்கு அதிபராக முய்சு உள்ள நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை அங்கே நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

அங்கு மொத்தம் 93 எம்பிக்கள் இருக்கும் நிலையில், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 2.8 லட்சம் மாலத்தீவு மக்கள் இந்த முறை தங்கள் எம்பிக்களை தேர்வு செய்தனர்.

தேர்தல்: மாலத்தீவைப் பொறுத்தவரை அங்கே நமது நாட்டை போலப் பிரதமர் ஆட்சி இல்லை. அங்கே அதிபர் தான் எல்லாமே.. மாலத்தீவில் அனைத்து அதிகாரங்களும் அதிபருக்கே இருக்கும். இந்த அதிபர் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனியாக நடக்கும். கடந்தாண்டு நடந்த இந்த அதிபர் தேர்தலில் தான் முய்சு வெற்றி பெற்று இருந்தார். இதேபோல தேர்தல் நடந்து சில மாதங்கள் கழித்து மாலத்தீவு நாடாளுமன்றத்திற்குத் தனியாகத் தேர்தல் நடக்கும். அதில் தான் எம்பிக்கள் தேர்வாவார்கள்.

அதிபராக யார் இருந்தாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை முக்கியம். அப்போது தான் அதிபர் விரும்பிய சட்டங்களைக் கொண்டு வர முடியும். இதன் காரணமாகவே முய்சுவால் கடந்த சில மாதங்களாக விரும்பிய சட்டத்தைக் கொண்டு வர முடியவில்லை. இதன் காரணமாகவே நேற்றைய நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. இதற்கிடையே மாலத்தீவு அதிபராக இருக்கும் முய்சு இப்போது நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மையைப் பெற்றுவிட்டார்.

முய்சுவுக்கு வெற்றி: மாலத்தீவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முய்சு கட்சி அதிகப்படியான இடங்களில் வென்றது. அங்கு மொத்தம் 93 இடங்கள் இருக்கும் நிலையில், இதுவரை குறைந்தது 66 இடங்களை முய்சு கட்சி வென்றுள்ளது. இது நாடாளுமன்றத்தில் 3இல் 2 பங்காகும். இந்த வெற்றியைத் தொடர்ந்து முய்சு தனது சீன ஆதரவு செயல்பாடுகளை அதிகரிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பு முய்சுவின் பிஎன்சி கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்ந்தே வெறும் 8 எம்பிக்கள் மட்டுமே இருந்தார்கள். இதனால் அவரால் விரும்பிய சட்டங்களை எளிதாகக் கொண்டு வர முடியவில்லை. அவர் எதாவது சட்டத்தைக் கொண்டு வர முயன்றால் நாடாளுமன்றத்தில் அது தோற்கடிக்கும் நிகழ்வுகளே தொடர்ந்தது. இதனால் இந்த நாடாளுமன்றத் தேர்தல் முய்சு கட்சிக்கு முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் படுதோல்வி: இந்தச் சூழலில் தான் முய்சு மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தார். அங்கு முன்பு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்திருந்த முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சியால் சுமார் 12 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க