tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மதுரை, செப். 5–

முதலீடுகள் ஈர்க்க சென்ற முதல்வர்ஸ்டாலின்அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டுவதா என்று தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கேள்வி விடுத்தார்.

 

மதுரையில் பிரேமலதா நேற்று அளித்த பேட்டி:

முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதாக கூறி அமெரிக்கா சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்று சைக்கிள் ஓட்டுகிறார், பாடுகிறார், சிலை முன் போட்டோ எடுத்து மகிழ்கிறார். அவர் எவ்வளவு முதலீடுகளை ஈர்க்கிறார் என்பதை பார்ப்போம். 

ஏற்கனவே வெளிநாடுகளுக்கு சென்று எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. எத்தனை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.

கார்பந்தயம்

 முதலீடுகளை ஈர்க்கிறேன் என்று சொல்லி அவர் அமெரிக்கா செல்வதற்கு பதில், தமிழகத்தில் நடக்கும் ஊழல்களை சரி செய்திருந்தாலே நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது செய்வதாகவே எடுத்துக் கொண்டிருக்கலாம்.

ஒரே இரவில், 5,000 கோடி ரூபாய் செலவு செய்து கார் பந்தயம் நடத்தி உள்ளனர். அதனால், யாருக்கு என்ன பயன்? அந்த பணத்தை வைத்து, தமிழகம் முழுதும் நல்ல தரமான ரோடுகளை அமைத்திருக்கலாம்.

சினிமா துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் இருக்கின்றன. 

‘பசுத்தோல் போர்த்திய புலிகள்’ போல் சில பெரிய மனிதர்கள் கீழ்த்தரமான வேலைகளை செய்கின்றனர். பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். பெண்கள் மீது அத்துமீறலில் ஈடுபடுவோருக்கு துாக்கு தண்டனை அளிப்பதில் தவறில்லை. சில ஆண்களின் தவறான செயல்களால், ஒட்டுமொத்த ஆண்களுக்கும் தலைகுனிவாக உள்ளது.

அரசுத் தரப்பில், நடிகர் விஜயின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி அளிக்காமல் இழுக்கின்றனர். கார் பந்தயம் நடத்த ஒரே இரவில் நீதிமன்ற அனுமதியை அரசு பெறுகிறது. ஆனால், ஜனநாயக ரீதியில் கட்சித் துவங்கி மாநாடு நடத்தினால், அதற்கு அனுமதி அளிக்காமல் கேள்வி மேல் கேள்வி கேட்டு காலம் கடத்துகின்றனர். இப்படியெல்லாம் செய்து ஒருவர் வளர்ச்சியை மற்றவர் தடுத்துவிட முடியாது. விஜய் மாநாடு நடத்தி கொள்கைகள், கோட்பாடுகளை அறிவிக்கட்டும். அதன் பின் தான், அவரோடு கூட்டணி வைக்க முடியுமா என்பது குறித்து யோசிக்கவே முடியும்.

 

இவ்வாறு பிரேமலதா கூறினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க