tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

ராஞ்சி, நவ. 11–

ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடக்கும் சமயத்தில் முதல்வரின்உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

 ஜார்க்கண்டில் முதல்வர்ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு வருகிற 13, 20ம் தேதிகளில் சட்டசபைத்தேர்தல் நடக்கிறது. தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.

இந்நிலையில், மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் நெருங்கிய உதவியாளர் சுனில் ஸ்ரீவஸ்தவா வீடு உட்பட பல இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். தலைநகர் ராஞ்சி மற்றும் ஜாம்ஷெட்பூரில் மொத்தம் ஒன்பது இடங்களில் இந்த சோதனை நடந்தது. சிஆர்பிஎப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்புடன் வருமானவரித்துறையினர் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.

 மாநிலத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் சுரங்க முறைகேடு தொடர்பாக, சமீபத்தில் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ மேற்கொண்ட விசாரணையின் தொடர்ச்சியாக இந்த சோதனை நடத்தப்பட்டது என வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்த வருமானவரிச் சோதனை குறித்து மாநில காங்கிரஸ்மூத்த தலைவர் ராகேஷ் சின்கா கூறுகையில், ‘ஜார்க்கண்ட்க்கு இது ஒன்றும் புதிதல்ல. மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள், அவர்களின் ஊழியர்களின் வீடுகளில் அடிக்கடி வருமான வரிச்சோதனைகள் நடத்தப்படுகின்றன. தேர்தலுக்கு முன்பாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகள் மூலமாக, இங்கு மாநிலத்தில் கால்பதிக்க பாஜ நினைக்கிறது ” என்று குற்றம் சாட்டினார்.

ராசி பலன்

மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். பயணங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் உண்டாகும். ஆரோக்கியம் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். தந்தை... மேலும் படிக்க

உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவுக்கேற்ற செலவுகள் உண்டாகும். சமூகப் பணிகளில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப்... மேலும் படிக்க

சந்தேக உணர்வுகளால் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக்கொள்ளவும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வேகத்தை விட விவேகம் உயர்ந்தது என்பதை புரிந்து கொள்வீர்கள். எளிமையான பணிகள் கூட... மேலும் படிக்க

மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வர்த்தக வியாபாரத்தில் பொருள் வரவுகள் மேம்படும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.... மேலும் படிக்க

இழுபறியாக இருந்துவந்த வந்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். தாய் மாமன் வழியில் அனுகூலம் உண்டாகும். குழந்தைகளின் விருப்பங்களை... மேலும் படிக்க

வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் இனம் புரியாத சிந்தனைகள் மூலம் புதுவிதவிதமான அனுபவங்கள் ஏற்படும். இலக்கிய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய... மேலும் படிக்க

குடும்ப பெரியோர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மறைமுகமான போட்டிகளை சமாளிப்பீர்கள். உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் அகலும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வாகனம் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வீடு கட்டுவது சார்ந்த... மேலும் படிக்க

உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனைகள் மூலம் வியாபாரத்தில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். புதிய வீடு மற்றும்... மேலும் படிக்க

சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். செய்யும் முயற்சிக்கு உண்டான வெற்றிகள் கிடைக்கும்.... மேலும் படிக்க

செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை வெற்றிகொள்வீர்கள். எதிர்பார்த்து இருந்துவந்த வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் ஆதரவுகள் மேம்படும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள்.... மேலும் படிக்க

வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். அரசு தொடர்பான காரியங்களில் சில விரயங்கள் உண்டாகும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். கடன் தொடர்பான... மேலும் படிக்க

வியாபார பணிகளில் சிறு மாற்றங்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். சமூகப் பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். எந்த ஒரு... மேலும் படிக்க