tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, மே 20

'முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஏற்க மறுத்த மருத்துவமனை நிர்வாகம், இருதய அறுவை சிகிச்சைக்காக பெற்ற, 3.64 லட்சம் ரூபாய் கட்டணத்தை, 50,000 ரூபாய் இழப்பீட்டுடன் சேர்த்து வழங்க திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூர் காலடிபேட்டையை சேர்ந்த மோகன் என்பவர், தாக்கல் செய்த மனு:

கடந்த, 2016 முதல் இருதயத்தில் சிறியளவில் பிரச்னை இருந்து வந்தது. இதற்காக, சென்னை ஷெனாய் நகரில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில், 2018 டிசம்பர் 26 ந்தேதி இருதய அறுவை சிகிச்சைக்கு சேர்ந்தேன். மறுநாள் அறுவை சிகிச்சை முடிந்தது.

முதல்வர் மற்றும் பிரதமரின் மருத்துவ காப்பீட்டுக்கான அட்டையை சிகிச்சைக்கு முன் வழங்கினேன்.

அறுவை சிகிச்சைக்கு, முதல்வர், பிரதமரின் காப்பீடு அட்டைகள் ஏற்கப்படும் என்ற அறிவிப்பு, மருத்துவமனை வளாகத்தில் ஒட்டப்பட்டு இருந்தது.

இருப்பினும், இருதய அறுவை சிகிச்சைக்கு பின், காப்பீடு திட்ட அட்டைகள் ஏற்கப்படாது எனக்கூறி, 3 லட்சத்து 64,673 ரூபாய் கட்டணம் வசூலித்தனர்.

அறிவிப்புக்கு மாறாக, காப்பீடு திட்ட அட்டைகளை ஏற்காதது சேவை குறைபாடு; நியாயமற்ற வணிக நடவடிக்கை. எனவே, மன உளைச்சல் ஏற்படுத்திய மருத்துவமனை நிர்வாகம் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

மனுவை, திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் எஸ்.எம்.லதா மகேஸ்வரி, உறுப்பினர்கள் பி.வினோத்குமார், பி.முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் நபர், காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை பெறுவதற்கான தகுதி பற்றி, வெளிப்படுத்தி இருப்பார்.

காப்பீடு திட்டங்களின் கீழ் தான் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக, புகார்தாரர் அல்லது அவரது உதவியாளர் என யாரும் தெரிவிக்கவில்லை என்ற மருத்துவமனை தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. பணம் செலுத்தும் முறை, நோயாளியின் காப்பீட்டு திட்டத்தின் உரிமை உள்ளிட்டவை குறித்து, மருத்துவமனை அல்லது மருத்துவமனை சார்ந்த உயர் அதிகாரிகள் தான் விசாரிக்க வேண்டும்; இது கடமை. அறுவை சிகிச்சை குறித்தோ, மருத்துவர் மீதோ, எவ்வித குற்றச்சாட்டையும் கூறவில்லை.

மருத்துவமனை தரப்பு சேவை குறைபாடு புரிந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. எனவே, சிகிச்சைக்கு செலுத்திய கட்டணம், 3 லட்சத்து, 64,673 ரூபாயை புகார்தாரருக்கு திருப்பி அளிக்க வேண்டும்.

மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு, 50,000 ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவாக 5,000 ரூபாயையும், மருத்துவமனை நிர்வாகம் செலுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க