tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஆக. 26–

பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயமல்ல. தி.மு.க.,வில் ஏகப்பட்ட பழைய மாணவர்கள். அனைவரும் அசாத்தியமானவர்கள். அவர்களை சமாளித்த முதல்வருக்கு ஹேண்ட்ஸ் ஆப்,” என, நடிகர் ரஜினி பாராட்டினார். அமைச்சர் எ.வ. வேலு நூல் வெ ளியீட்டு விழாவில் ரஜினி பேசியதாவது:

 ஸ்டாலின் முதல்வரான பின், அவர் சந்தித்த தேர்தல் அனைத்திலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது, அவரது ஆளுமை, உழைப்பு, அரசியல் ஞானத்தை காட்டுகிற

து. ஒரு கட்சி தலைவர் மறைந்த பின், அடுத்து வரும் சந்ததியினர் அதை கட்டிக்காக்க எவ்வளவு கஷ்டப்படுகின்றனர் என்பதை பார்த்திருப்பீர்கள்.

அதை முதல்வர் ஸ்டாலின் சாதாரணமாக செய்து கொண்டிருக்கிறார். 

சமாளிப்பது சாதாரணம் அல்ல

ஒரு ஆசிரியர், புதிய மாணவர்களை எளிதாக சமாளித்து விடலாம். பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயமல்ல. இங்கு ஏகப்பட்ட பழைய மாணவர்கள். அதுவும் அசாத்தியமானவர்கள். 

எல்லாரும், ‘ரேங்க்’ வாங்கி, வகுப்பை விட்டு போக மாட்டோம் என்கின்றனர். அவர்களை சமாளிப்பது சாதாரணம் அல்ல. துரைமுருகன் என்ற ஒருவர் உள்ளார். கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். அவரிடம் ஏதேனும் ஒரு விஷயத்தை கூறினால், ‘அப்படியா சந்தோஷம்’ என்பார். நல்லா இருக்கு என்கிறாரா... ஏன்டா இப்படி செய்கிறீர்கள் என்கிறாரா என ஒன்றும் புரியாது. இவர்களை சமாளிக்கும் ஸ்டாலினுக்கு, ‘ஹேண்ட்ஸ் ஆப்’. வேலு எழுதிய புத்தகத்தின் தலைப்பு, கருணாநிதியால் தேர்வு செய்யப்பட்டது. புத்தகத்தின் விலை தான் அதிகம். 1,000 ரூபாய். விலையை குறைத்தால் எல்லாரும் படிப்பர்.

ஒரு சிலர் தான் சமூக நன்மைக்காக பாடுபடுகின்றனர். அதில், கருணாநிதி முக்கியமானவர். அவர் சந்தித்த சோதனைகளை வேறு யாராவது சந்தித்திருந்தால் காணாமல் போயிருப்பர். விமர்சனம் மழை போல் இருக்க வேண்டும்; புயல் மாதிரி இருக்கக் கூடாது.ஆலமரம்

ஆனால், கருணாநிதி ஆலமரம்; யாராலும் அசைக்க முடியாது. ஐந்தாண்டு ஆட்சியில் இல்லை என்றால் திண்டாடுகின்றனர். அவர், 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாதபோது கட்சியை காப்பாற்றினார். கருணாநிதி விமர்சனம் எழுதியவரின் தராதரம் பார்ப்பார். நல்ல அறிவார்ந்து, சரியாக விமர்சித்து எழுதி இருந்தால், அவரிடமே விளக்கம் கூறுவார்.

  இப்போதும் விமர்சனம் செய்கின்றனர். யார் மனதையும் நோகடிக்காதீர்கள்.

கருணாநிதி பேச்சு ஒரே ஸ்வரத்தில் இருக்கும். கேட்பவர்களிடம் சோகம், சிரிப்பு, துள்ளல் வரும். அது பேச்சு திறமை. ‘சிவாஜி’ படம் அரசியல்வாதிகளை, அரசை விமர்சித்து எடுத்தது. அந்த கதை தெரிந்திருந்தும், அந்த படத்தை பார்த்தார். படம் முடிந்த பின், ‘நமக்கும் நல்லது செய்ய ஆசை’ எனக் கூறி பெரு மூச்சு விட்டார். அதில் பல ஆயிரம் விஷயங்கள் இருந்தன.

இவ்வாறு ரஜினி பேசினார்.

உதயநிதிக்கு வாழ்த்து

என்னுடைய பாசத்துக்குரிய, இப்போது தான் கொஞ்சம் நாள் அரசியலுக்கு வந்துள கடினமாக உழைத்து பேச்சில் தனக்கென பாணியை உருவாக்கி கொண்டு மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் பெயர், புகழ் பெற்று தனக்கொரு நல்ல அரசியல் எதிர்காலம் இருக்கு என்று நிரூபிக்கும் அன்பு தம்பிஉதயநிதி ஸ்டாலின்'' என்று ரஜினி புகழ்ந்தார்.

+++++++++++++

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க