tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, அக். 20–
‘‘மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,’’ என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
சென்னை விமான நிலையத்தி, நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டும் என, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியது, மக்களை திசை திருப்பும் செயல். ஹிந்தி மாதம் என்பது மத்திய அரசின் அனைத்து துறைகளிலும், ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிப்பது வாடிக்கை. 
தி.மு.க., – காங்., கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும், ஹிந்தி வாரம் கடைபிடிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்களாக, தி.மு.க.,வினர் இருந்த துறைகளிலும் அதை முழுமையாக கடைபிடித்தனர். 
தமிழ் மொழியை பாதுகாப்பதிலும், உலகளவில் எடுத்து செல்வதிலும் முதன்மையாக இருப்பவர் பிரதமர் மோடி. தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போல திருவள்ளுவருக்கு கலாசார மையம் ஏற்படுத்தி இருக்கிறோம். இப்படித்தான் தமிழ் மொழியை உலக அளவில் போற்றுதலுக்குரிய மொழியாக ஆக்கி இருக்கிறோம். 
கவர்னர்
சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடந்த ஹிந்தி மாத நிறைவு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது, திராவிட நல் திருநாடு என்ற வாக்கியம் விடுபட்டுள்ளது. அந்தத் தவறு யார் செய்தது என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த தவறுக்கு, சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பும் கேட்டுவிட்டனர். அப்படி இருக்கும்போது, அந்த செயலுக்கு கவர்னரை தொடர்புபடுத்துவது நியாயமான விஷயம் இல்லை. குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியில், கவர்னர் சிறப்பு விருந்தினராகவே கலந்து கொண்டார். அப்படி இருக்கும்போது, அவரை எப்படி நடந்த சிறு தவறுக்கு பொறுப்பாக முடியும்?
     தமிழகத்தின் சமீபத்திய மழை வெள்ளத்தை, தி.மு.க., அரசு சரியாக கையாளவில்லை. அதை திசை திருப்பும் நோக்கிலேயே, தூர்தர்ஷனில் நடந்த ஒரு விவகாரத்தை அரசியலாக்குகின்றனர். இது 1967ம் ஆண்டு கிடையாது. தற்போது மக்கள் தெளிவாக உள்ளனர். நாம் யாரும் ஹிந்திக்கு ஆதரவாளர்கள் கிடையாது; அதேசமயம் எதிர்ப்பாளர்களும் கிடையாது. 
தி.மு.க., நிர்வாகிகள் நடத்தும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஹிந்தியை பாடமாக வைக்க மாட்டோம் என சொல்லி விட்டு ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிப்பரா? அதற்கு அவர்கள் முன் வர மாட்டார்கள். அவர்களுக்கு, அதில் வருமானம் கிடைக்கிறது. மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனிமேல் நடக்காது; அது எடுபடாது. 
இவ்வாறு அவர் கூறினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க