tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

தஞ்சாவூர், மே 22- சேதுபாவாசத்திரம் அருகே ஊராட்சிக்கு சொந்தமான, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடிக்கும் போது, அருகில் இருந்த வணிக வளாகத் தில் சுவர் இடிந்து விழுந்ததில் வாடகை பாத்திரக் கடையில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்ட நபர் பேராவூரணி காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியருக்கும் புகார் அனுப்பி உள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் அருகிலுள்ள குருவிக்கரம்பை யில் ஊராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதன் அருகே ஊராட் சிக்கு சொந்தமான சுமார் 30 அடி உய ரத்தில் பழுதடைந்த நிலையில் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை ஜேசிபி இயந்திரம் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிக்கப்பட்டது. அப்போது இப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திடீரென இடிந்து, அருகில் இருந்த ஊராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் ராமசாமி என்பவர் நடத்தி வந்த வாடகை பாத்திரக் கடையின் மேல் விழுந்தது. இதில் பாத்திரக் கடையின் உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்த 250-க்கும் அதிகமான பிளாஸ்டிக் சேர்கள் மற்றும் அலுமினிய பாத்திரங்கள் சேத மடைந்தன. வணிக வளாகத்திற்கு எதிரே தனி யார் வங்கி, அருகில் போக்குவரத்து சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத தால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப் பட்டது. இதுகுறித்து ராமசாமி கூறுகையில், “நான் 2015 ஆம் ஆண்டு முதல் வாட கைக்கு இருந்து வருகிறேன். இது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. இங்கு ஊராட்சிக்கு சொந்தமான கட்டி டத்தை இடிக்கும் போது முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும். ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை. வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்கும் போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என கூறுகின்றார். தொட்டியை இடிப்பதற்கு யார் அனு மதி வழங்கியது என தெரியவில்லை. பல லட்சம் ரூபாய் செலவில் ஊராட்சி யில் இருந்து கட்டப்பட்ட வணிக வளா கத்தில் ஒரு கடை மட்டுமின்றி, கட்டிடத் தில் பல்வேறு இடங்களில் விரிசல் விழுந் துள்ளது. இதுகுறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பி யுள்ளேன். காவல்துறையிலும் புகார் அளித்துள்ளேன். விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க