tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

கோல்கட்டா, ஜூலை 20–

மே. வங்­க கவர்னர் மாளிகையில் பணி­யாற்றும் தற்காலிக பெண் ஊழி­யர் ஒருவர், கோல்கட்டா போலீசில் கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் அளித்தார். 

அதில், ‘கவர்­னர் அழைப்­பால் ஏப்­ரல் 24 மற்­றும் மே 2ல் அவரை சந்­தித்­தேன். அப்­போது, நல்ல பத­வி­யில் நிய­மிப்­ப­தாக கூறி, பாலி­யல் தொல்லை செய்­தார். இந்த விவ­கா­ரம் குறித்து புகார் அளிக்க கூடாது என்ற கவர்­ன­ரின் சிறப்பு பணி அதி­காரி வலி­யு­றுத்­தி­னார் ’ என்று முறை­யிட்­டுள்­ளார்.

கவர்­ன­ருக்கு வழக்கு விதி­வி­லக்கு உள்­ள­தால். அவ­ரது சிறப்பு பணி அதி­கா­ரிக்கு எதி­ராக போலீ­சார் எப்­ஐ­ஆர் பதிவு செய்­துள்­ள­னர். அந்த எப்­ஐ­ஆர் அடிப்­ப­டை­யில் எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்க கூடாது என, ஐகோர்ட் கடந்த மே மாதம் தடை விதித்­தது.

இதற்­கி­டை­யில், இந்த புகார் அடிப்­ப­டை­யில் விமர்­சித்த முதல்­வர் மம்தா, திரி­ணா­முல் காங். பிர­மு­கர் குணால் கோஷ் மற்­றும் 2 எம்­எல்­ஏக்­க­ளுக்கு எதி­ராக கவர்­னர் அவ­துாறு வழக்கு தொடர்ந்­தார். கடந்த 15ம் தேதி விசா­ரித்த ஐகோர்ட் தனி நீதி­பதி, இந்த விவ­கார அடிப்­ப­டை­யில் கவர்­னரை விமர்­சிக்க கூடாது என்று இடைக்­கால தடை விதித்து, விசா­ர­ணையை ஆகஸ்ட் மாதத்­துக்கு தள்ளி வைத்­தார். இதை எதிர்த்து, ஐகோர்ட் டிவி­சன் பெஞ்­சில் முதல்­வர் மம்தா அப்­பீல் செய்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், எப்­ஐ­ஆர் விசா­ர­ணைக்கு தடை விதித்த ஐகோர்ட் உத்­த­ரவை எதிர்த்து பெண் ஊழி­யர் தாக்­கல் செய்த அப்­பீலை, சுப்­ரீம் கோர்ட் தலைமை நீதி­பதி டி.ஒய்.சந்­தி­ர­சூட், நீதி­ப­தி­கள் ஜெ.பி.பர்­தி­வாலா, மனோஜ் மிஸ்ரா கொண்ட பெஞ்ச் நேற்று விசா­ரித்­தது.

மனு­தா­ரர் தரப்பு சீனி­யர் வக்­கீல் ஷியாம் திவான், ‘‘அர­சி­யல் சட்­டத்­தின் 361வது பிரி­வுப்­படி, கவர்­ன­ருக்கு கிரி­மி­னல் வழக்கு விலக்கு உள்­ளது. ஆனால், அது கவர்­ன­ரின் பதவி பொறுப்­பு­கள் சார்ந்த அம்­சங்­க­ளுக்கு மட்­டுமே பொருந்­தும். பாலி­யல் தொல்லை போன்ற கடும் குற்­றங்­க­ளுக்­கும் வழக்கு விலக்கு வழங்­கு­வது சரி­யாக இருக்­காது. பொது­வாக, கவர்­ன­ருக்கு எதி­ரான புகார்­க­ளில் விசா­ரணை நடத்­தி­விட்டு, அவ­ரது கவர்­னர் பதவி முடி­யும் வரை, விசா­ரணை அடிப்­ப­டை­யி­லான நட­வ­டிக்­கை­களை ஒத்­தி­வைப்­பது வழக்­கம். ஆனால், பாலி­யல் புகார்­க­ளுக்கு அந்த நடை­மு­றையை பின்­பற்­று­வது சரி­யாக இருக்­காது.

எனவே, இது­கு­றித்த வழி­காட்­டு­தல் விதி­மு­றை­களை உரு­வாக்க வேண்­டும். மே.வங்க கவர்­ன­ருக்கு எதி­ரான பாலி­யல் புகாரை மே.வங்க போலீஸ் மூலம் விசா­ரிக்க வேண்­டும். பாதிக்­கப்­பட்ட பெண்­ணுக்கு போலீஸ் பாது­காப்பு மற்­றும் இழப்­பீடு வழங்க வேண்­டும்’’ என்று வாதிட்­டார். அவ­ரி­டம் நீதி­ப­தி­கள், ‘இந்த வழக்­கில், மத்­திய அரசை ஒரு தரப்­பாக சேர்த்­தீர்­களா?’ என்று கேட்­ட­னர். ‘இல்லை’ என்று, அவர் பதி­ல­ளித்­தார்.

இதை­ய­டுத்து நீதி­ப­தி­கள் பிறப்­பித்த உத்­த­ர­வில், ‘மனு­தா­ரர், இந்த வழக்­கில் மத்­திய அரசை ஒரு தரப்­பாக சேர்க்க அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றது. மத்­திய அர­சும், மே.வங்க மாநில அர­சும் பதி­ல­ளிக்க வேண்­டும். இந்த வழக்கு விசா­ர­ணை­யில் உத­வு­மாறு, அட்­டர்னி ஜென­ரல் ஆர்.வெங்­கட்­ர­ம­ணியை கேட்­டுக் கொள்­கி­றோம்’ என்று குறிப்­பிட்­ட­னர்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க