tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, மே 28

தேர்தல் தோல்வி பயத்தால், தேர்தல் பரப்புரையில் அநாகரீகமாக பேசி வந்த நரேந்திர மோடி, எதிர்க்கட்சியினர் ஆபாச நடனம் ஆடி மகிழ்ந்து கொள்ளலாம் என்று தரம் தாழ்ந்து பேசி இருப்பது கண்டனத்துக்குரியது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

மக்களவை தேர்தல் பரப்புரையின் தொடக்கத்திலேயே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை திரித்துக் கூறி, முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கையைப் போல இருப்பதாக கூறி, அபத்தமான வாதங்களை நாள்தோறும் பிரதமர் மோடி பேசி வந்தார். மேலும் காங்கிரசின் மறுப்பையும் பொருட்படுத்தாமல், மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகிற பரப்புரையை பாசிச போக்கு கொண்ட நரேந்திர மோடி நிறுத்திக் கொள்ளவில்லை.

முதல்கட்ட தேர்தலில் தமிழ்நாட்டில் தொடங்கிய மோடி எதிர்ப்பு அலை, 6 கட்டங்களாக இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் எதிரொலிக்க தொடங்கியதால் தேர்தல் கள நிலவரத்தை உளவுத்துறை மூலம் அறிந்த பிரதமர் மோடியின் பேச்சில் பதற்றமும், அச்சமும் தொடர்ந்து வெளிப்பட ஆரம்பித்தன. காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடித்து விடுவார்கள் என்று கூறுவதைவிட முட்டாள்தனமான பேச்சு வேறு எதுவும் இருக்க முடியாது.

அதோடு நிற்காமல் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியல் சட்டத்தையே மாற்றி விடுவார்கள் என்றும், தற்போது எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி. மக்களுக்கு வழங்கப்படுகிற இடஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு வழங்கி விடுவார்கள் என்று கடைந்தெடுத்த ஆதாரமற்ற அவதூறு பிரச்சாரத்தை சமீபகாலமாக தொடர்ந்து பிரதமர் மோடி நவீன கோயபல்ஸ் போல பேசினார். இடஒதுக்கீடு என்பது மதத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதில்லை என்று பல நீதிமன்ற தீர்ப்புகள் உறுதி செய்திருக்கின்றன. இடஒதுக்கீடு என்பது மதங்களை பொருட்படுத்தாமல் சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இந்து மதத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டில் எப்படி பங்கு இருக்கிறதோ, அதேபோல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பங்கு இருக்கிறது.

மோடிக்கு எதிர்ப்பு அலை

உண்மை நிலை இப்படியிருக்க சிறுபான்மையின மக்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சை பரப்புரையில் திரும்பத் திரும்ப கூறுவதன் மூலமாக தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று மோடி பகல் கனவு காண்கிறார். ஆனால், 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத காரணத்தால் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தவறான ஜி.எஸ்.டி. அமலாக்கம், விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு நியாய விலை மறுப்பு, மாநில உரிமைகள் பறிப்பு என மக்கள் விரோத ஆட்சி நடத்தியதால் மக்களிடையே பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக அலை வீசிக் கொண்டிருக்கிறது.

மோடி தனது பரப்புரையில் எதிர்கட்சியினரை மிகமிக இழிவாக தரக்குறைவான முறையில் பிரதமர் பதவியை வகிக்கிறோம் என்கிற குறைந்தபட்ச நாகரீகம் கூட இல்லாமல் பேசி வருகிறார். முகலாய அரசவையில் நடத்தப்படுகிற முஜ்ரா நடனத்தை எதிர்கட்சியினர் நடத்தி மகிழ்ந்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். ஒரு பிரதமர் ஆபாச நடனத்தை மேற்கோள் காட்டி எதிர்கட்சியினரை தேவையில்லாமல் இழிவுபடுத்துவது நரேந்திர மோடியின் அரசியல் அநாகரீகத்தையே காட்டுகிறது.

தேர்தல் பரப்புரையில் மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் நரேந்திர மோடி தன்னை கடவுளின் அவதாரம் என்றும், ‘தாய் தன்னை பெற்றெடுக்கவில்லை என்று கூறும் ஒருவர், உயிரியல் வழிமுறைப்படி தான் பிறக்கவில்லை என்று கூறும் ஒருவர், இந்திய நாட்டின் பிரதமராக இருப்பதற்கு மனரீதியாக தகுதியுடைவர் தானா?” என்கிற கேள்வி நாட்டு மக்களிடையே எழுந்திருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக, மக்களை மதரீதியாக ஏமாற்றியதைப் போல 2024 இல் ஏமாற்ற முடியாது. மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்த மோடியின் ஆட்சியை அகற்றி பாடம் புகட்டுவதில் உறுதியாக இருக்கிறார்கள். இந்தியா கூட்டணி ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு ஆட்சி அமைக்கப் போவது உறுதி. இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க