tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஜூலை 2–

மோடி அரசு ஒரு மைனாரிட்டி அரசு தான் என்பதைஇன்னமும் பா.ஜ.உணரவில்லை என்று ஆ.ராசா கூறினார்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் திமுக கொறடா ஆ.ராசா பேசியதாவது:

  பாஜ 370 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களில் வெல்லும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், பாஜ வெறும் 240 இடங்களையே பிடித்தது. 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்ற பாஜ தங்களுக்கு பெரும்பான்மை உள்ளது என்று எப்படி கூற முடியும்? பாஜ மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது என்பதை இன்னும் அவர்கள் உணரவில்லை.  

சர்வாதிகாரம்

 பாஜ அரசு நினைப்பதை அவர்களாக சொல்வது இல்லை. குடியரசுத் தலைவர் மற்றும் சபாநாயகர் மூலமாக சொல்கிறார்கள். பாஜ அரசின் அனைத்து செயல்பாடுகளும் சர்வாதிகாரமாக உள்ளது. பாஜ ஆட்சியில் பட்டியல், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் பல ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள்.

அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தியதற்காக இந்திரா காந்தி பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளார். பாசிசக் கொள்கையை கடைபிடிக்கும் பாஜவுக்கு அவசர நிலை குறித்து பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லை. நான் பெரியார் திராவிட மண்ணிலிருந்து வந்துள்ளேன். திராவிட மண்ணில் பாசிச பாஜவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசத்துக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் 40 இடங்களை இந்தியா கூட்டணிக்கு வழங்கியுள்ளனர். திராவிடக் கொள்கை ஏன் தேவை என்பதை பாஜவினர் உணர வேண்டும். 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், எட்டு கோடி மக்களின் பிரதிநிதியாக உள்ள தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானத்தை ஒன்றிய அரசு கிடப்பில் போட்டுள்ளது. நீட் தேர்வு மூலம் மெரிட், மேனேஜ்மெண்ட், பேமெண்ட் என மூன்று பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

காரணம் பெரியார்

 ஒவ்வொருவருடம் தாங்கள் செய்துகொண்டு இருக்கும் குலத் தொழிலையே செய்ய வேண்டும் என்ற கொள்கையை பாஜ வலியுறுத்துகிறது. எனது முன்னோர் வேலை தேடி இலங்கை சென்றனர். ஆனால், நான் இன்று ராகுலுடன் மக்களவையில் இருக்கிறேன். இதற்கு காரணம் தந்தை பெரியார்.  

நிறுவனங்களின் லாபம் மீதான வரியை 33 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக மோடி அரசு குறைத்துவிட்டது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதன் மூலம் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினரின் வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. பொதுத் துறை நிறுவனங்களை விற்று வேலைவாய்ப்பை பறிப்பதன் மூலம் இட ஒதுக்கீட்டையும் மறைமுகமாக ஒழிக்கிறார்கள். இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்களை 2 பேர் விற்கிறார்கள், அதனை 2 பேர் வாங்குகிறார்கள்.  

ஊழலில் ஊறிய பா.ஜ.

முகாலாயர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றால் ஆரியர்களும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தான். சுதந்திர தின உரையில் எந்த பிரதமரும் இதுவரை எதிர்க்கட்சிகளை குறை சொல்லி பேசியதே இல்லை. ஆனால், பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடி பேசினார். எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியல் செய்வதாக விமர்சிக்கும் பாஜவில் பல வாரிசுகள், எம்.பி.க்கள், அமைச்சர்களாக உள்ளனர். அதானி குழும முறைகேடுகள் குறித்து 50 நாட்கள் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய போதும் பதில் சொல்ல பிரதமர் மோடிக்கு முதுகெலும்பு இல்லை. முழுக்க முழுக்க ஊழலில் ஊறியது பாஜ அரசுதான்.

இவ்வாறு ஆ.ராசா பேசினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க