tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

பாட்னா, ஏப். 29

பிரதமர் மோடியின் பொய்களால் பாஜக மீது மக்கள் வெறுப்படைந்துள்ளதாக பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு தேசிய அளவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவருமான தேஜஸ்வி யாதவ் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளதாவது:

'பீகார் மற்றும் நாட்டின் பல இடங்களில் 2 கட்ட வாக்குப்பதிவு சதவீதம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேள்விக்கு பதிலளித்த தேஜஸ்வி யாதவ், 'பாஜக மன உளைச்சலில் இருக்கிறது. பீகாரில் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற பிரச்னைகள் குறித்து நாங்கள் ஒரு இயக்கத்தை நடத்தி வருகிறோம். நாங்கள் எங்கள் உண்மையான பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். மக்கள் இப்போது மோடி மற்றும் பாஜகவின் பொய்களால் வெறுப்படைந்துள்ளனர். 10 ஆண்டுகள் கொடுத்தும், எந்த வேலையும் செய்யப்படவில்லை. நாட்டின் வளர்ச்சி, பீகாரின் வளர்ச்சி பற்றி பேசும் எதையும் பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. இந்தத் தேர்தலில் உள்ளூர் பிரச்னைகளே ஆதிக்கம் செலுத்தும்' என்று தெரிவித்தார்.

மோடியின் தரம்தாழ்ந்த பேச்சு

'முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு பற்றிய பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கள் உங்களுக்கு பின்னடைவாக மாறக்கூடுமா? என்ற கேள்விக்கு, 'மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள் என்று நான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன். எனவே வேலையின்மை, வறுமை மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்னைகளால் இந்துக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மந்திர் - மசூதி மற்றும் இஸ்லாம் - சனாதனி என்று, இவ்வளவு தரம் தாழ்ந்த பேச்சுக்களை பிரதமர் மோடி பேசுவார் என்று மக்கள் எதிர்பார்க்கவில்லை. 10 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தேன்? புதிய பார்வை என்ன? எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறேன் ? என்பது குறித்து ஒரு பிரதமர் பேச வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கின்றனர்' என்று தெரிவித்தார்.

'சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த சலசலப்பு குறைந்துள்ளதா?' என்ற கேள்விக்கு பதிலளித்த தேஜஸ்வி யாதவ், 'சலசலப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. சமூக மற்றும் பொருளாதார நீதி கொள்கை திட்டங்களுக்கு உதவுவதற்கான நீண்ட கால நடவடிக்கை இது. சாதிவாரி கணக்கெடுப்பு எங்களுக்கு ஒரு தேர்தல் பிரச்னை அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இது அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கு உதவும்' என்று தேஜஸ்வி கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க