tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, அக். 2–

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்்

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் சர்வதேச முதியோர் தினவிழா மற்றும் தமிழ்நாடு முழுவதும் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 975 இடங்கள் கொண்ட முதியோர் பராமரிப்பு உதவியாளர் சான்றிதழ் பயிற்சி வகுப்பை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.

 

இந்த முதியோர் பராமரிப்பு உதவியாளர் சான்றிதழ் பயிற்சி வகுப்பு 3 மாதம் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தேசிய முதியோர் மருத்துவமனையில் முதியோர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்லாங்குழி, கேரம், பாடல்களை கண்டறிதல், தினசரி வாசிப்பு போட்டிகளில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு அமைச்சர் பரிசுகளையும் வழங்கி னார்.  

 முதியோர் அதிகரிப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

 முதியோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக உயர்ந்து வருகிறது, தமிழ்நாடு அதிகமான முதியோர்களைக் கொண்ட மாநிலமாக உள்ளது, இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் முதியோர்களுக்கான பிரத்யேக மருத்துவமனை கிண்டியில் உள்ளது. இதுவரை 1 லட்சத்து பதினோராயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர்கள் இந்த மருத்துவமனையில் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். இன்று உலகம் முழுவதும் முதியோர் பராமரிப்பில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

 

* தமிழகத்தில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர் பதவி காலியாக இருக்கிறதே..? 

பதவி உயர்வுக்கான பட்டியலில் 26 பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் சிலர் நீதிமன்றத்திற்கு சென்றதன் காரணமாக, உடனடியாக முதல்வர் பணியிடங்களை நிரப்புவதில் கால தாமதம் ஏற்பட்டது. தற்போது அந்த வழக்கில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது. எனவே 26 பேரின் பட்டியலில் இருந்து, 14 பேர் காலியாக உள்ள 14 மருத்துவக் கல்லூரிகளில் முதல்வராக நியமனம் செய்து அரசாணை பிறப்பிக்கப்படும்.

ரஜினி உடல்நிலை

* நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரே?

ரஜினிகாந்த் பீரியாடிக் செக்கப்பிற்காக மருத்துவமனை சென்றுள்ளார். வெறும் வயிற்றில் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதால் திங்களன்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று முறை அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனையிடம் பேசி விசாரித்துள்ளோம், விரைவில் நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்புவார்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க