tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

லக்னோ, அக். 20–
உ.பி.யில்  எக்ஸ்பிரஸ்  ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 400 க்கும் மேற்பட்ட போலீசாருக்கு  அபராதம் விதிக்கப்பட்டது.
    ரயில்களில் டிக்கெட் இன்றி பயணிப்பவர்களை பிடிப்பதற்காக வடக்கு மத்திய ரயில்வே அதிரடி சோதனை நடத்தியது. இதையடுத்து காஷியாபாத், கான்பூர் இடையே பல்வேறு  இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த நூற்றுக்கணக்கானவர்கள் பிடிபட்டனர். இதில்400க்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் பயண டிக்கெட் இல்லை என்பதுடன், ஏசி முன்பதிவு பெட்டிகளில்ஏறி படுத்துக் கொண்டனர். அதற்குரிய பயணிகள் வந்த போதும் காலி செய்ய மறுத்தனர். இதில் பிடிபட்ட பலரும் உயர் அதிகாரிகள். அவர்களுக்கு டிக்கெட் பரிசோதகர்கள் அபராதம் விதித்த போது, எதிர்த்து சண்டையிட்டுள்ளனர். எங்களுக்குஅபராதம் விதித்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்தனர். மிரட்டலை செல்போனில் படம் பிடித்ததும், மன்னிப்பு கேட்டு பலரும் அபராதம் கட்டினர்.  அபராதம் விதிப்பதை அறிந்ததும் பல போலீஸ் அதிகாரிகள் ஒவ்வொரு பெட்டியாக மாறி, மாறி ஏதாவது ரயில்நிலையத்தில் நின்றதும் இறங்கி தப்பித்தவர்களும் உண்டு. போலீஸ் அதிகாரிகள் மிரட்டலை கண்டு கொள்ளாமல் ரயில்வே அதிகாரிகள் கடமையைச் செய்தனர்   என்று வடக்கு மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சசிகாந்த் திரிபாதி தெரிவித்தார்.
    போதிய டிக்கெட் இன்றி பயணித்ததால் ரயில்வேக்கு இழப்பு ஏற்படுத்தியதுடன், முன்பதிவு பயணிகளுக்கும் இடையூறு விளைவித்தனர். ஓசியில் பயணிக்கும் ஒவ்வொரு தனிநபர் மீதும் கடும் நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க