tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

டார்ஜிலிங், அக். 13–

விஜயதசமி விழா நேற்று நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங்கில் உள்ள சுக்னா கண்டோன்மென்ட்டில் ராணுவ வீரர்களுடன் இணைந்து ஆயுதங்களுக்கு பூஜை செய்து வழிபட்டார்.

கலச பூஜையைத் தொடர்ந்து, ஆயுதங்கள், வாகனங்கள், பீரங்கிகள், தகவல் தொடர்பு அமைப்புகள், நடமாடும் தளங்கள், டிரோன் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு நவீன ராணுவ உபகரணங்களுக்கும் மாலை அணிவித்து பூஜை செய்து, பிரார்த்தனை மேற்கொண்டார். மேலும், ராஜ்நாத் சிங், ராணுவ வீரர்களின் நெற்றியில் வெற்றித் திலகமிட்டார்.

நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியாவது:

 ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்

கு விஜயதசமி நல்வாழ்த்துக்கள். ராணுவத்தினருடன் ஆயுத பூஜை செய்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆயுதங்களை வணங்கி, உரிய மரியாதையுடன் நடத்தப்படும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது ஒரு சிறிய விஷயமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில், அது நம் உயர்ந்த மரியாதை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது.

ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு நாம் அவற்றை வணங்குகிறோம். நாட்டில் உள்ள அனைத்து தொழில் வல்லுநர்களும், ஆண்டு முழுவதும் ஒரு முறை தங்கள் கருவிகளை வணங்குவதை அனைவரும் பார்த்திருப்பீர்கள்.

 தீபாவளி மற்றும் வசந்த பஞ்சமி அன்று மாணவர்கள் தங்கள் பேனா மற்றும் புத்தகங்களை வணங்குகிறார்கள். இசைக்கலைஞர்கள் தங்கள் இசைக்கருவிகளை வணங்குகிறார்கள். நம் நாட்டில் பல குடும்பங்கள் விவசாயத்துடன் தொடர்புடையவை. ஆயுத பூஜை என்பது நமது கருவிகளை வழிபடுவது மட்டுமல்ல, நமது பணியின் மீதான மரியாதையும் கூட.

 இன்றைய நாள் வெற்றி நாள். ராமர், ராவணனை கொன்ற நாள். அது மட்டுமல்ல மனித குலத்திற்கு கிடைத்த வெற்றி. நமது ராணுவ வீரர்களிடம் ராமரின் குணங்களை நான் காண்கிறேன். நமது தேசம் இன்றுவரை, அடுத்தவர் நிலத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் யாரையும் தாக்கியது இல்லை. 

 உலகளாவிய சூழ்நிலை எதுவாக இருந்தாலும், எதிர்கொள்ள ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என நான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். தேசப் பாதுகாப்பில், நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

அண்டை நாடுகளிடம் இருந்து எந்தவித தீவிர தாக்குதலும் நடக்காது என, நாம் புறந்தள்ளி விடமுடியாது என்று நடப்பு சூழலை குறிப்பிட்ட அவர், அவர், நாம் முழு அளவில் தயாராக இருக்கிறோம் என்பதை ஆயுத படைகள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க