tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை ஐகோர்ட் உத்தரவுசென்னை, ஜூலை 31–

 

கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியும், சூப்பர் மார்க்கெட், ரேஷன் கடைகளில் மது விற்க 

அனுமதி கோரியும் அளித்த மனுவை, அரசு பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் 

உத்தரவிட்டுள்ளது.

 

சென்னை கோட்டூரை சேர்ந்த முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த மனு:கடந்த 2003 முதல், ‘டாஸ்மாக்’ நிறுவனம் 

வாயிலாக மது விற்பனை நடக்கிறது. சில்லரை விலைக்கும் கூடுதலாக மதுபானங்கள் விற்கப்படுகின்றன. மொத்த 

விற்பனையில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடக்கிறது. 

இந்தத்தொகை, விற்பனையாளர் முதல் துறையின் 

அமைச்சர் வரை பங்கிடப்படுவதாக, தகவல் கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான மதுபான தயாரிப்பு நிறுவனங் கள், 

ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக உள்ளன. இதனால், குறிப்பிட்ட சில, 

‘பிராண்ட்’ மதுபானங்களை மட்டுமே டாஸ்மாக் நிறுவனம் விற்கிறது. 

மதுபானங்களை விட, கள்ளில் ஆல்கஹால் அளவு மிகக்குறைவாக உள்ளது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, 

புதுச்சேரி மாநிலங்களில், எந்த இடையூறும் இன்றி கள் விற்பனை நடக்கிறது. 

இதை, ஆரோக்கிய பானமாக 

கருதுகின்றனர். அரசு விதித்த தடையை மறுபரிசீலனை செய்யலாம். கள் விற்பனையை ஒழுங்குபடுத்தலாம்.  

எனவே, 

சூப்பர் மார்க்கெட்டுகளில் அனைத்து ரக மதுபானங்களும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். நியாய விலை 

கடைகளில், குறைந்த விலையில் மதுபானம் கிடைக்க வேண்டும். கள் விற்பனைக்கான தடையை நீக்க வேண்டும்.

 

ஒவ்வொரு கடைக்கும் வெளியில், அதிக விலையில் மது விற்கவில்லை என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகை 

வைக்க வேண்டும்.

கள் விற்பனைக்கு தடை விதித்த, 1986ம் ஆண்டிலும், டாஸ்மாக் கடைகள் வாயிலாக மதுபான 

விற்பனைக்கு அனுமதித்த, 2003ம் ஆண்டிலும் அமல்படுத்திய சட்டத் திருத்தங்களை ரத்து செய்ய 

வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், 

குமரேஷ்பாபு அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

தன் குற்றச்சாட்டுக்கள் குறித்து, 

மோசடி வழக்குகளை விசாரிக்கும் புலனாய்வு பிரிவின் விசாரணைக்கு உத்தரவிடும்படி, மனுதாரரான முரளிதரன் 

கோரினார்.

அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், இந்த வழக்கில் விரிவான பதில் மனுத்தாக்கல் 

செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து, குற்றச்சாட்டுக் கள் குறித்து அரசு பதில் அளிக்காமல் உத்தரவு பிறப்பிக்க 

முடியாது என, முதல் பெஞ்ச் தெரிவித்தது.

கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்க சில பரிந்துரைகளை மனுதாரர் 

தெரிவித்திருப்பதாகவும், அரசின் கொள்கை முடிவு என்பதால், அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் முதல் 

பெஞ்ச் தெரிவித்தது. 

ரேஷன் கடை மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் மது விற்பனை மற்றும் கள் விற்பனைக்கான 

தடையை நீக்கக்கோரிய மனுதாரரின் மனுவை, அரசு பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கவும், முதல் பெஞ்ச் 

உத்தரவிட்டது. விசாரணையை, எட்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தது

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க