tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, மே 23

வங்கக்கடலில் வரும் 25ம் தேதி ரீமால் புயல் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழக தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நேற்று காலை 5.30 மணிக்கு காற்றழுத்தத் தாழ்வு உருவானது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், வருகிற 25ந் தேதி முதல் 28ந் தேதி வரை மிதமான பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது.

இது வடகிழக்கு திசையில் நகா்ந்து வருகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும், அதன்பிறகு, மேலும் வலுப்பெற்று 25ந் தேதி புயலாக உருவெடுக்கும். இந்த புயல் 26ம் தேதி மாலை தீவிர புயலாக மேற்குவங்காளத்திற்கு அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஓமன் நாடு பரிந்துரைப்படி இந்த புயலுக்கு ரீமால் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

புயல் வடக்குப்பகுதியில் நகரும்போது தமிழகத்தில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல தெற்கு கேரளம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மீதும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் தமிழகத்தின் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்றுடன், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (வெள்ளிக்கிழமை) திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொருத்தவரை இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி பாரன்ஹீட்டையொட்டியே இருக்கும்.

வெப்பம் குறைந்தது

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் காரணத்தால் வெப்பம் சற்று குறைந்துள்ளது. வங்கக் கடலில் புயல் உருவானாலும் அது வடக்கு நோக்கி நகர நகர தமிழகத்தில் வெப்பநிலை உயரும். அதாவது இன்று முதல் மே 26-ந் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது. நேற்றைய நிலவரப்படி ஈரோட்டில் அதிகபட்சமாக 99.68 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

சென்னையில் நேற்று புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை பெய்தது. அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதற்கிடையே குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக வங்கக் கடல் பகுதிகளில் 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் 20 செ.மீ. மழை

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச அளவாக கடலூர் மாவட்டம் வேப்பூரில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

காட்டுமன்னார்கோவில் 18 செ.மீ., விழுப்புரம் 17 செ.மீ., மயிலாடி 14 செ.மீ., லக்கூர், தொழுதூர் தலா 13 செ.மீ., குண்டேரிப்பள்ளம், வால்பாறை தாலுக்கா அலுவலகம் தலா 12 செ.மீ., தம்மம்பட்டி 12 செ.மீ., வால்பாறை, கொடநாடு தலா 11 செ.மீ., அவிநாசி, கோபிசெட்டிப்பாளையம் தலா 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

கன்னியாகுமரியில்

விடிய,விடிய மழை தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றும் மாவட்ட முழுவதும் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது.

கொட்டாரம், கன்னியாகுமரி, மயிலாடி, சாமிதோப்பு, அஞ்சுகிராமம் பகுதிகளில் இரவு 10 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இடைவிடாது இன்று காலை 6 மணி வரை தொடர்ச்சியாக 8 மணி நேரம் பெய்தது. அதன் பிறகும் காலையில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.

மாவட்டத்தில் அதிகபட்ச மழை மயிலாடியில் 14 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. கனமழையின் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, தக்கலை, திருவட்டார், குளச்சல், சுருளோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், அணை பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் குழித்துறை தாமிரபரணி ஆறு மற்றும் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

13 வீடுகள் இடிந்தது

தொடர் மழை காரணமாக இதுவரை 13 வீடுகள் இடிந்துள்ளது. கீரிப்பாறை, குலசேகரம், தடிக்காரன்கோணம், தோவாளை, செண்பகராமன் புதூர் பகுதிகளில் ரப்பர் பால் மற்றும் செங்கல் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க