tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, மே 22

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இதுவாகும்.

இன்று தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதற்கிடையே கடந்த 4ந் தேதி ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயிலும் தொடங்கியது. கத்திரி வெயில் தொடங்கிய பின்னர் வெயில் தாக்கம் அதிகரித்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.

இதையடுத்து தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24ந் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இதுவாகும். இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் 23ம் தேதிக்குப் பின்னர் மழை படிப்படியாகக் குறையும் என்றும் வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில்

தென்மேற்கு பருவமழை

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, கேரளாவில் வரும் மே 31ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா இதுதொடர்பாக பேசுகையில், “இந்த முறை கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமான தேதியில் தொடங்குகிறது. வழக்கமாக ஜூன் 1-ம் தேதி பருவமழை தொடங்குகிறது. இம்முறை ஒருநாள் முன்னதாக மே 31-ல் தொடங்குகிறது. இது முன்கூட்டியே இல்லை. வழக்கமான தேதிக்கு ஒருநாள் முன்னதாக தொடங்குகிறது. இதனால், பல தென்னிந்திய மாநிலங்களில் மழைப்பொழிவு இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

21 மாவட்டங்களில் கனமழை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்று முதல் 24 ந்தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மழையும், கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கன மழையும், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல் ஆகிய 21 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.

நாளை தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரியில் கனமழையும் பெய்யும்.

நாளை மறுநாள் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

கன்னியாகுமரியில்

விடிய, விடிய மழை

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று மாலை 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது.இன்று காலையிலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாரல் மழை நீடித்தது. கொட்டாரத்தில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. குளச்சல் பகுதியிலும் கன மழை பெய்தது. மயிலாடி, நாகர்கோவில் கன்னிமார், கோழிப் போர்விளை, மாம்பழத்துறையாறு, களியல், குழித்துறை, சுருளோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து கொண்டே இருக்கிறது. திற்பரப்பு பகுதியில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இன்று 4-வது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோதை ஆறு, தாமிரபரணி ஆறு போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அருவிகளில் குளிக்கத் தடை

நாமக்கல் மாவட்டம் மாசிலா அருவி, நம்ம அருவி, ஆகாய கங்கை அருவி, தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லவும், குளிக்கவும் வனத்துறை தடை விதித்துள்ளது. மேலும், அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மூணார், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

12 பேர் பலி

கடந்த 16 ந்தேதி முதல் 21 ந்தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கு 12 பேர் பலியாகி உள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க