tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஜூலை 24–

மத்திய பட்ஜெட்டில் வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதால் வரி செலுத்துவோரின் சேமிப்பு அதிகமாகும் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியது: 

 இந்த ஆண்டின் பட்ஜெட் நாட்டை வளர்ச்சியின் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அவரது ஒட்டுமொத்த குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.  

 இந்த பட்ஜெட், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிகாரம் அளிக்கும். இது கிராமங்களைச் சேர்ந்த ஏழை விவசாயிகளை செழிப்புக்கான பாதையில் கொண்டு செல்லும். 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து உயர்த்தப்பட்ட பிறகு, புதிய நடுத்தர வர்க்கம் உருவெடுத்திருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கை அவர்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்ச்சியை சேர்ப்பதுடன், எண்ணற்ற வேலைவாய்ப்புகளையும் வழங்குகிறது.

 இந்த பட்ஜெட் கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய உயரத்தைக் கொண்டு வந்துள்ளது. நடுத்தர வகுப்பினர், பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரின் வாழ்க்கையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்தப் பட்ஜெட். பெண்களின் பொருளாதாரக் கூட்டாண்மையை உறுதி செய்யும். அதே வேளையில், சிறு வணிகங்கள், எம்.எஸ்.எம்.இ. ஆகியவற்றுக்கு ஒரு புதிய பாதையையும் அமைக்கும். 

 கோடிக்கணக்கான வேலைகளை உருவாக்கும் வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், ஒரு இளைஞரின் முதல் வேலையின் முதல் சம்பளம் அரசால் ஏற்கப்படும். உயர்கல்விக்கான ஏற்பாடுகள், ஒரு கோடி இளைஞர்களுக்கான உள்ளகப் பயிற்சித் திட்டத்தின் கீழ் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றுவதன் மூலம், இளம் பயிற்சியாளர்கள் புதிய வாய்ப்புகளைக் கண்டறிய முடியும். ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வீட்டிலும் தொழில்முனைவோரை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை அரசு கொண்டுள்ளது. முத்ரா கடன் திட்டத்தின் கீழ் பிணையற்ற கடன்களின் வரம்பை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.  

 இந்தியாவின் ஸ்டார்ட்அப், புத்தாக்கச் சூழல் அமைப்புக்கு ஏராளமான வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளது. விண்வெளிப் பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிக்க 1000 கோடி ரூபாய் தொகுப்பு நிதி, ஏஞ்சல் வரியை ரத்து செய்தல் ஆகியவை இதற்கு உதாரணம். இந்தியா மீதான உலகத்தின் ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் சுற்றுலாத் துறைக்கு புதிய வழிகள் திறக்கப்பட்டுள்ளன.  

கடந்த 10 ஆண்டுகளில், ஏழைகள், நடுத்தரப் பிரிவு மக்களுக்கு வரி நிவாரணத்தை அரசு உறுதி செய்துள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரியைக் குறைத்தல், நிலையான கழிவை உயர்த்துதல், டிடிஎஸ் விதிகளை எளிமைப்படுத்துதல் போன்ற முடிவுகளால் வரி செலுத்துவோர் அதிக பணத்தைச் சேமிக்க அனுமதிக்கும்.  

 இந்த பட்ஜெட், விவசாயிகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவும். விவசாயத் துறையில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டியது காலத்தின் தேவை. ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள் கட்டுவது, 5 கோடி பழங்குடியின குடும்பங்களை அடிப்படை வசதிகளுடன் இணைக்கும் பழங்குடியினர் உன்னத கிராம இயக்கம் போன்றவை பயன் உள்ள திட்டங்கள். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவதற்கும், வளர்ந்த பாரதம் திட்டத்திற்கு வலுவான அடித்தளம் அமைப்பதற்கும் இந்த பட்ஜெட் ஒரு உந்து சக்தியாக இருக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க