tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

தென்காசி, ஜூலை 26-

 ஆடி அமாவாசையை ஒட்டி நடைபெற இருக்கிற சொரிமுத்து ஐயனார் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு

   நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக பத்து நாட்கள் தங்கி பத்து நாள் திருவிழாக்களையும் கண்டுகளித்து வருவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார்கள்.

 கொரோனா கால கட்டத்தில் விதிக்கப்பட்ட தடையை காரணம் காட்டி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சொரிமுத்து ஐயனார் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறை மூலம் பல்வேறு இடையூறுகள் செய்து வருகிறார்கள் .    

   வாகனங்கள் கோவிலுக்கு செல்வதற்கு குறிப்பிட்ட நேரம் விதித்தும் குடில்கள் அமைப்பதற்கு தடை விதித்தும் வருகிறார்கள்.

   இது சம்பந்தமாக வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் நிதித்துறை அமைச்சர் ஆகியோரிடம் இன்று மனுவை திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ. பத்மநாதன் வழங்கினார் .

   மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர்கள் வனத்துறை அமைச்சரி டம் தொலைபேசியில் பேசி அமைச்சர் அவர்களும் இது சம்பந்தமாக ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது .

   மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனுவை வழங்கச் சொல்லுங்கள். அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் அரசாணை பிறப்பிக்க வேண்டியது இருக்கிறது என்கிற தகவலை சொன்னார்கள்.

    பின்னர் வனத்துறை அமைச்சர் அலுவலகத்திற்கு சென்று அமைச்சர் பரிந்துரை செய்து கொடுத்த கடிதத்தை வனத்துறை அமைச்சர் அலுவலகத்தில் சிவ. பத்மநாதன் வழங்கினார்.

கடந்த ஆண்டு இதேபோல் ஏற்பட்ட பிரச்சனையின் அடிப்படையில் ஐந்து நாட்கள் கோவிலில் தங்கி சாமி கும்பிட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 உங்கள் மனுவில் கண்டுள்ளபடி கோவிலுக்கு செல்ல அனுமதி வேண்டும் எனில் தனியாக அரசாணை பிறப்பிக்க வேண்டி இருக்கிறது.

    எனவே மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனுக்களை வழங்கச் சொல்லி உடனடியாக அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி சிவ. பத்மநாதனிடம் அறிவுறித்தினார்கள்.

 பின்னர் வருவாய்த்துறை அமைச்சர் கே. கே .எஸ் .எஸ். ஆர். மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை சந்தித்து விபரத்தைச் சிவ .பத்மநாதன் விவரித்து கூறினார். அமைச்சர் பெருமக்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க