tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

விருதுநகர், நவ. 12–
புளுகுமூட்டையை அவிழ்த்து விடும் வாய்த்துடுக்கு பேச்சால் தான் பழனிசாமி தொடர்ந்து  தோற்கடிக்கப்படுவார் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
-
விருதுநகர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பட்டம்புதுாரில்  நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசியதாவது:
தமிழகத்தில் உயர் கல்வியில் அதிகளவு மாணவர்கள் சேரும் மாவட்டங்களில் விருதுநகர் முன்னணியில் இருக்கிறது. விருதுநகரில் பிளஸ் 2 முடித்த 95 சதவீதம் பேர் உயர் கல்வியில் சேருகின்றனர். பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் பலியாகும் தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு, உயர் கல்வி வரையிலான, கல்வி செலவுகளை அரசு ஏற்கும். இதற்கு முதல் கட்டமாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். 
சக்தியை மீறி உழைப்பு
நாட்டின் சக்திமிக்க தலைவர் பட்டியலில், என் பெயரையும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர். தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக, என் சக்தியையும் மீறி உழைக்கிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்காக நான் இன்னும் வேகமாக ஓட நினைக்கிறேன். 
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக, தமிழகம் முழுவதும் நான் தேர்தல் பிரச்சாரம் செய்து, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற கூட்டங்கள் வழியாக, மக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றேன். இந்த மனுக்களுக்கு தீர்வு காண்பதற்காக, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற தனி துறையை நான் உருவாக்கினேன்.
மக்கள் குறை தீர்ப்பது ஒரு அரசின் கடமையாகும். இதன்படி, வீடு, நிலம் இல்லாமல் கோரிக்கை மனுக்கள் வந்ததை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டேன். திமுக ஆட்சியில் 3 ஆண்டுகளில் 10 லட்சத்து 3 ஆயிரத்து 874 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், இ–-பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. 
புளுகு மூட்டை
ஆட்சியில் இருந்தபோது, மக்கள் நலனைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத, இப்போதைய எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி, ‘‘மக்கள் நலத்திட்டங்களுக்கு மூலதனச் செலவுகளை மேற்கொள்ளாமல், கருணாநிதி பெயரில், மக்களுக்குப் பயன்படாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கான நிதியை நான் ஒதுக்குவதாக’’ உளறியுள்ளார். 
அவரது கருத்து சிரிப்பை வரவழைக்கிறது. ஒருவர் பொய் சொல்லலாம். ஆனால், ஏக்கர் கணக்கில் சொல்லக்கூடாது என்று காமெடிதான் நினைவுக்கு வருகிறது. அதை இனிமேல், கொஞ்சம் மாற்றி, ‘‘பொய் சொல்லலாம்; ஆனால், பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக்கூடாது’’ என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்குப் புளுகுமூட்டையை அவிழ்த்து விடுகிறார்.திமுக ஆட்சியில் கருணாநிதியின் பெயரால், மக்கள் நலனுக்காக அரசு செய்துவரும் மூலதனச் செலவுகள் என்னென்ன; எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் என்னென்ன என்று இதே மேடையில் என்னால் மணிக்கணக்கில் சொல்ல முடியும்.
ஆணவப் பேச்சு
தமிழகத்தில் இருக்கும் ஒரு கோடியே 20 இலட்சம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘கருணாநிதி மகளிர் உரிமைத் திட்டம்’ அதை பயன்படாத திட்டம் என்கிறீர்களா? எதைச் சொல்கிறார் பழனிசாமி?
இப்படி வாய்த்துடுக்காவும், ஆணவமாவும் பேசி பேசித்தான் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் உறுதியாக சொல்கிறேன். உங்கள் ஆணவத்துக்காகவே, தமிழக மக்கள் உங்களை இனிமேல் தோற்கடித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அது உறுதி.
கருணாநிதி பெயரை வைக்காமல், உங்கள் பெயரையா வைக்க முடியும்? என்ன பேசுகிறீர்கள்? ‘கருணாநிதி’ என்பது தமிழர்கள் மனதில் பொறிக்கப்பட்ட பெயர். தமிழகத்தின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளம். திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் கருணாநிதியின் பெயரைத்தான் சொல்லும். கருணாநிதியின் மகனாக மட்டுமல்ல, அவரது தொண்டனாகவும் இதை நான் பெருமையாக சொல்கிறேன். 
அவரது புகழ் நாடு முழுவதும் பரவியுள்ளது. அந்தப் புகழ் வெளிச்சம் பழனிசாமியின் கண்களை கூச வைக்கிறது. அவ்வளவுதான். திராவிட மாடல் ஆட்சியின் புகழ் வெளிச்சத்தில் புதுவெளிச்சம் தேடும் புற்றீசல்கள் காணாமல் போகும். 
இவ்வாறு முதல்வர் பேசினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க