tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஆக. 27-–

 

‘‘எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சிக்கும்போது, வார்த்தைகளில் கடுமை இருக்கக்கூடாது,’’ என, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

 

அவர் அளித்த பேட்டி:

 

பழனியில் நடந்த முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு நேரில் செல்லாமல், காணொளி காட்சி வாயிலாக பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘ஜாதி, மதம், இனம் வேற்றுமை பார்ப்பதில்லை’ என்றார். ஹிந்து மதத்தை வேற்றுமையாக பார்க்கவில்லை என்றால், கிருஷ்ணர் ஜெயந்திக்கு வாழ்த்து சொல்லியிருக்க வேண்டும்.

 

முதல்வர் ஸ்டாலினுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். முதல்வராக இருப்பவர் மற்றவர்களின் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்க வேண்டும். 

 

‘ஹிந்து அறநிலையத் துறை நடத்தும் கல்வி நிலையங்களில் கந்த சஷ்டி கற்பிக்கப்படும்’ என்ற, பழனி முருகன் மாநாட்டு தீர்மானத்தை, வி.சி., – எம்.பி., ரவிகுமார் எதிர்த்துள்ளார். மற்ற மதத்தினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில், அவரவர் மதம் சார்ந்த விஷயங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால், ஹிந்து கல்வி நிறுவனங்களில் முருகன் பற்றி கற்பித்தால் எதிர்க்கின்றனர். 

 

கல்வியில் காவி மயம் பற்றி பேசுவபவர்கள், ஹிந்து கோவில் வருமானம் அரசுக்கு செல்வது பற்றி பேசுவதில்லை.

 

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது அவரது பாணியாக இருக்கலாம். அவரது கருத்தை அவர் அழுத்தம் திருத்தமாக சொல்லியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சிக்கும்போது, வார்த்தைகள் கடுமையாக இருக்க வேண்டாம் என்பதே என் கருத்து. 

 

‘தி.மு.க., – அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை’ என, அண்ணாமலை கூறியிருக்கிறார். கூட்டணி குறித்து மேடையில் மட்டும் முடிவு செய்வது சரியா என்பதே என் கேள்வி. இதை வைத்து, அண்ணாமலைக்கும், எனக்கும் சர்ச்சையை ஏற்படுத்தி விட வேண்டாம். 

 

பா.ஜ.,வில் இப்போது நான் சாதாரண காரியகர்த்தா. எனவே, மாநிலத் தலைவரின் கருத்தை இப்போது மறுத்து பேச முடியாது. ஆனால், வருங்காலத்தில் விவாதங்கள் வரலாம்.

 

என்னை பொறுத்தவரை, தி.மு.க.,வை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும் என்பதே பா.ஜ.,வின் குறிக்கோள். செப்டம்பருக்குள் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.

 

தி.மு.க., ஆல மரம் போன்றது என ரஜினி பேசியிருக்கிறார். தெலுங்கானாவில் இப்படி தான் ஒரு கட்சியை சொல்லிக் கொண்டிருந்தனர். அங்கு ஆல மரம் சாய்ந்தது. ஆந்திராவிலும் ஒரு ஆல மரம் சாய்ந்து போனது. அரசியலில் எதுவும் நடக்கலாம்.

 

தி.மு.க.,வில் ஒரு புயலை, சுனாமியை ரஜினி ஏற்படுத்தியுள்ளார். ஆசிரியராக இருக்க வேண்டிய அமைச்சர் துரைமுருகன், மாணவராகவே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடும்ப ஆட்சியில், மூத்த தலைவர்களுக்கு எந்த மரியாதையும் இருக்காது. இதை, தி.மு.க., தொண்டர்கள் சிந்திக்க வேண்டும். 

 

தி.மு.க., மூத்த தலைவர்களுக்கு பா.ஜ.,வில் உரிய மரியாதை கிடைக்கும். இப்போது, பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது என்பதை, அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இவ்வாறு அவர் கூறினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க