tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

விழுப்புரம், நவ. 11–

நடிகர் விஜய்க்கு அதீத முக்கியத்துவம் தரப்படுகிறது. புதிய கட்சி துவங்கினாலும் வி.சி.க.வுக்கு போட்டியாக முடியாது என்று திருமாவளவன் திட்டவட்டமாக கூறினார்.

 

விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:

விஜயகாந்த் கட்சி துவங்கி, பெரிதாக பேசப்பட்டபோது என்ன சொன்னார்கள் தெரியுமா? ‘இப்படித்தான், ஏற்கனவே பல நடிகர்கள் கட்சித் துவங்கினார்கள்; அவர்களெல்லாம் கொஞ்ச நாட்களிலேயே காணாமல் போய் விட்டார்கள். அது போன்றதொரு நிலை தான் விஜயகாந்துக்கும் ஏற்படும்’ என்று சொன்னார்கள். ஆனால், அவர் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு வரை வந்தார். ’

முக்கியத்துவம் ஏன்?

இப்போது, நடிகர் விஜய் கட்சித் துவங்கி இருக்கிறார். அவருக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவர் நடத்திய மாநாட்டுக்கு இத்தனை லட்சம் பேர் வந்தனர்; அத்தனை லட்சம் பேர் வந்தனர் என வியந்து வியந்து செய்தி போடுகின்றனர்; பேசுகின்றனர். 

வி.சி.,க்கள் சார்பிலும் கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. அதற்கு எத்தனை லட்சம் பேர் வந்தனர் தெரியுமா? இத்தனைக்கும் திருமாவளவன் சினிமா ஹீரோ இல்லை. விஜய் ‘ஆர்கானிக் மாஸ்’ என்கின்றனர். அப்படி என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி ‘இன்ஆர்கானிக் மாஸா?’

எங்கள் மாநாட்டுக்கு ஆட்களை கூட்டி வரவில்லை. யாருக்கும் பணம் கொடுக்கவில்லை; பிரியாணி கொடுக்கவில்லை. ஆனால், உணர்வோடு குடும்பம் குடும்பமாக குழந்தைகளோடு மாநாட்டுக்கு வந்தார்கள். மற்ற மாநாடுகளைக் காட்டிலும் இது தானே சிறந்த மாநாடு? 

இன்றைக்கு சொல்கிறேன். மாநாட்டில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால், அதையெல்லாம் யாரும் வியந்து பேசவில்லை; பெயருக்குக் கூட விவாதிக்கவில்லை. வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து, இனி திருமாவளவன் தலைமையில் தான் தமிழகத்தில் ஆட்சி அமையும் என, யாரும் விவாதப் பொருளாக்கவில்லை. 

திருமாவளவன் தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என பேசவில்லை. யாரும் பேச மாட்டார்கள். அது குறித்து இந்த திருமா, ஒரு நாளும் கவலைப்பட்டதில்லை. எல்லோரும் வி.சி.,க்களை குறைத்து மதிப்பிட்டு; சிறுமைப்படுத்த பார்க்கின்றனர். 

குறைத்து மதிப்பிடுவதா?

ஆசை காட்டினால், இருக்கும் கூட்டணியை விட்டு வெளியேறி வந்து விடுவார் திருமா என நினைக்கின்றனர்; இது தவறு. எத்தனை பேர் புதிது புதியாக அரசியலுக்கு வந்தாலும், அவர்களெல்லாம் வி.சி.,க்களுக்கு போட்டியாக இருக்க முடியாது. 

சமூக ஊடகங்கள் மோசமானவை; அதில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். எதிலும் அவசரப்படக்கூடாது. விஜய் மாநாட்டுக்கு வந்த கூட்டத்தினரை திரும்பத் திரும்ப காட்டிய, ‘விஷுவல் மீடியா’க்கள், நம்முடைய மாநாட்டுக்கு அப்படியொரு ‘கவரேஜ்’ வழங்கவில்லையே ஏன்? 

வி.சி.,க்களை குறைத்து மதிப்பிடுவதுதான் காரணம். அந்நிலை விரைவில் மாறும். 

இவ்வாறு அவர் பேசினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க