tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திருநெல்வேலி, ஜூலை 1–

விருப்பம் இல்லாமல் தான் விருப்ப ஓய்வு கடிதம் கொடுத்தோம் என்று மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கூறினர்.

நெல்லையில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை நடத்தி வரும் தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் (பிபிடிசி) என்ற தனியார் நிறுவனத்துக்கு சிங்கம்பட்டி ஜமீன் கொடுத்த 99 ஆண்டு குத்தகை காலம் 2028 ம் ஆண்டு முடிகிறது. எனவே தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு பிபிடிசி நிர்வாகம் முன்கூட்டியே விருப்ப ஓய்வு கொடுத்துள்ளது. 

மேலும், அவர்களை மலைக்கிராமங்களில் இருந்து கீழே இறக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. அதேநேரம், சுமார் 4 தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்த தொழிலாளர்கள், மாஞ்சோலை பகுதியை விட்டு கீழே இறங்க மனம் இல்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.

விருப்பமே இல்லை

மேலும், இப்பகுதியிலே தொடர்ந்து வாழ்வதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் தொடர்ந்து முன்வைக்கின்றனர். இதனையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாஞ்சோலைக்குச் சென்று தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். இதனிடையே, தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதி செய்து கொடுக்கும் வரை அவர்களை கீழே இறக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் குழு மாஞ்சோலை சென்று தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அதிகாரிகளிடம் விருப்பம் இல்லாமல்தான் நாங்கள் விருப்ப ஓய்வு கடிதத்தை கொடுத்துள்ளதாகவும், நிறுவனத்தின் சூழல் மோசமாக இருப்பதாகவும், நிறுவனம் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறி எங்களிடம் விருப்ப மனு தருமாறு நிறுவனத்தினர் தெரிவித்தாகவும் தொழிலாளர்கள் கூறினர்.

அதற்கு பதில் அளித்த தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், விருப்பம் இல்லாமல் விருப்ப ஓய்வு கடிதத்தை கொடுத்தவர்களின் விருப்ப ஓய்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும், விருப்ப ஓய்வு ரத்து செய்யப்பட்டவர்களுக்கு பணி வழங்குவது நிறுவனத்தின் விருப்பம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

இதனிடையே, நேற்று மாஞ்சோலையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசு ஏற்று நடத்தி, தொழிலாளர்களுக்கு நிலம், வீடு வழங்க வேண்டும் என்றும், நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க