tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மும்பை, அக்.11– 

மகாராஷ்டிரா ஷீரடி சாய்பாபா கோயி்ல் அறக்கட்டளை நிர்வாகத்துக்கு, மும்பை வருமான வரித்துறை கமிஷனர் (வரி விலக்கு பிரிவு) அனுப்பிய நோட்டீசில், ‘ஷீரடி கோயில் உண்டியல்கள் மூலம், 2015:16, 2017:18, 2018:19 ஆகிய நிதியாண்டுகளில், ரூ.159 கோடியே 12 லட்சம் காணிக்கை கிடைத்துள்ளது. அது, அடையாளம் தெரியாதவர்களால் கிடைத்துள்ள தொகை. எனவே, அதற்கு வருமான வரி விலக்கு கிடையாது. அந்த தொகைக்கான வருமான வரியை செலுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து, வருமான வரி மேல் முறையீடு தீர்ப்பாயத்தில் அறக்கட்டளை நிர்வாகம் முறையிட்டது. தீ்ர்ப்பாயம், கமிஷனரின் நோட்டீசை ரத்து செய்தது.

இதை எதிர்த்து, பம்பாய் ஐகோர்ட்டில் கமிஷனர் அப்பீ்ல் செய்தார். விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.குல்கர்னி, சோமசேகர் சுந்தரேசன் வழங்கிய தீர்ப்பு:

ஒரு அறக்கட்டளை, மத சேவை மற்றும் சமூக சேவைகளில் ஈடுபட்டால், வருமான வரி சட்டத்தின் 115 பிபிசி 2பி பிரிவின்படி, வருமான வரி விலக்கு கோரலாம்.

ஒரு அறக்கட்டளை, வருமான வரி சட்டத்தின் 80ஜி பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற அடிப்படையில், அது மத சேவை அமைப்பு இல்லை என்றோ. அதற்கு 115 பிபிசி 2பி பிரிவின்படி வருமான வரி விலக்கு கோர தகுதி இல்லை என்றோ தீர்மானிக்க முடியாது.

சாய்பாபா அறக்கட்டளை சட்டம் மற்றும் பம்பாய் அறக்கட்டளை சட்ட விதிமுறைகள்படி, இந்த அறக்கட்டளை, மத சேவை மற்றும் சமூக சேவைகளில் ஈடுபடும் அறக்கட்டளைதான். எனவே, உண்டியல் காணிக்கைக்கு வரி விலக்கு கோர, சட்டரீதியான முழு தகுதி உள்ளது. எனவே, வருமான வரி மேல் முறையீடு தீர்ப்பாயத்தின் தீ்ர்ப்பு சரியானது. அப்பீல் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஷீரடி சாய்பாபா கோயில் அறக்கட்டளை, உண்டியல் காணிககைக்கு வருமான வரி செலுத்த தேவையில்லை.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க