tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

ஆன்டிகுவா, ஜூன் 10

ஓமனை வீழ்த்தி ஸ்காட்லாந்து அபார வெற்றியை பதிவு செய்தது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடை பெற்று வருகிறது. ஆன்டிகுவாவில் நடந்த போட்டியில் ஸ்காட்லாந்து-ஓமன் அணிகள் மோதின.டாஸ் வென்ற ஓமன் கேப்டன் அக்யூப் இல்யாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் விளையாடிய ஓமன் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்தது. இதனால் ஸ்காட்லாந்துக்கு 151 ரன் இலக்காக இருந்தது.தொடக்க வீரர் பிரதிக் அதாவாலே 40 பந்தில் 54 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), அயன்கான் 39 பந்தில் 41 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். ஷப்யான் ஷரீப் 2 விக்கெட்டும், மார்க் வாட், பிரட் வீல், கிறிஸ் சோலே, கிறிஸ் கிரீவ்ஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றி னார்கள்.

பின்னர் ஆடிய ஸ்காட்லாந்து அணி 13.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரண்டன் மெக்முல்லன் 31 பந்தில் 61 ரன்னும் (9 பவுண்டரி, 2 சிக்சர்), ஜார்ஜ் முன்சே 20 பந்தில் 41 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். பிலால் கான், அக்யூப் இல்யாஸ், மெக்ரன் கான் ஆகியோருக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.ஸ்காட்லாந்து பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி நமீபியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இங்கிலாந்துடன் மோதிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ஸ்காட்லாந்து 5 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் முன்னிலையில் உள்ளது. அந்த அணி கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை 16-ந்தேதி எதிர்கொள்கிறது. ஓமனுக்கு 3-வது தோல்வி ஏற்பட்டது. அந்த அணி நமீபியாவிடம் சூப்பர் ஓவரிலும், ஆஸ்திரேலியா விடம் 39 ரன்னிலும் தோற்று இருந்தது. கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் 14-ந்தேதி மோதுகிறது.

 

 

 

 

 

ராசி பலன்

வியாபாரம் தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் சில மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். சவாலான செயல்களையும்... மேலும் படிக்க

இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். வெளியூர் பணி வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். சமூகப் பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். எதிர்ப்பாராத சில இடமாற்றம்... மேலும் படிக்க

மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். சந்தேக உணர்வுகளால் மகிழ்ச்சி இன்மை ஏற்படும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து... மேலும் படிக்க

ஆன்மிகப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபார முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு... மேலும் படிக்க

பணி நிமித்தமான முயற்சிகள் கைகூடும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். பங்குதாரர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். முன் கோபத்தால் சில விரயங்கள் நேரிடும். மற்றவர்கள் கூறும்... மேலும் படிக்க

பொழுதுபோக்கு செயல்பாடுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உணர்ச்சிப்பூர்வமாக செயல்படுவதை குறைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் எண்ணங்களை... மேலும் படிக்க

குடும்ப பெரியோர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மறைமுகமான போட்டிகளை சமாளிப்பீர்கள். உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் அகலும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வாகனம் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வீடு கட்டுவது சார்ந்த... மேலும் படிக்க

எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதளவில் தைரியம் உண்டாகும். காலி மனை மூலம் ஆதாயம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தபால் துறைகளில்... மேலும் படிக்க

செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். குடும்பத்தில்... மேலும் படிக்க

இனம்புரியாத சில சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்காலம்... மேலும் படிக்க

அவசரம் இன்றி எதிலும் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உடல்... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதரவான வாய்ப்புகள் உருவாகும். வியாபார பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும்.... மேலும் படிக்க