tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

சென்னை, டிச. 12–

தமிழ்நாட்டில் பைக் டாக்சிகள் இயங்க தடை இல்லை.ஆனால் விதிமுறைகளின்படி இயங்கவேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில், பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்தை தவிர்த்து, பேருந்து வழித்தடம் இல்லாத பகுதிகளுக்கு செல்லவோ, அவசர காலத்தில் விரைந்து செல்லவோ பொதுமக்கள் ஆட்டோவை பயன்படுத்தி வந்தனர். ஆனால் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர்.அதற்கு தீர்வாக சென்னை போன்ற பெரு நகரங்களில் பைக் டாக்ஸி அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த சூழலில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இருசக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்ட விவகாரம் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, "பைக் டாக்சிக்கு ஒரு புறம் வரவேற்பு, மறுபுறம் எதிரிப்பு இருந்தாலும் இதில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு கருதியே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வாடகை அல்லாத வாகனங்களில் ஒருவர் பயணம் செய்வதை சட்டம் ஏற்றுக்கொள்ளாத சூழல் உள்ளது. இதனால் சிறு விபத்து ஏற்பட்டால் கூட நீதிமன்றத்தால் நிவாரணம் மறுக்கப்படுகிறது. பைக் டாக்சி விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து முடிவெடுக்க வேண்டி உள்ளது. மத்திய அரசு இந்தியா முழுவதும் பைக் டாக்சிகள் இயக்க சில விதிமுறைகளை வழங்கி உள்ளது. இதுகுறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பைக் டாக்சிகளில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். பைக் டாக்சி பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. அதே சமயம் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாகவும் கருத்து நிலவுகிறது. தமிழ்நாட்டில் பைக் டாக்சிகள் இயங்கலாம், ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது. விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே தணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளோம். உரிய உரிமம், மூன்றாம் நபர் காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களுடன்தான் இயக்க வேண்டும். விதிகளின்படி பைக் டாக்சிகள் இயக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

ராசி பலன்

புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். வியாபாரப் பணிகளில் கனிவான பேச்சுகள் நன்மையை தரும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும்.... மேலும் படிக்க

குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். புதிய முடிவுகளை எடுக்கும்பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். பயனற்ற... மேலும் படிக்க

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்களின்... மேலும் படிக்க

செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். காது... மேலும் படிக்க

அரசு சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். உலகியல் நடவடிக்கையால் மனதில் மாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும்.... மேலும் படிக்க

எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப்... மேலும் படிக்க

குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உயர்வு உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆன்மிக பணிகளில் சில புரிதல்கள் உண்டாகும். பயணங்கள் மூலம் அலைச்சலும், அனுபவமும்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் சந்திப்புகள் ஏற்படும். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் அமைதி உண்டாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வாகனங்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு சார்ந்த... மேலும் படிக்க

பயணங்களால் அனுபவம் உண்டாகும். உறவுகள் மத்தியில் செல்வாக்குகள் ஏற்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் மேம்படும். பாரம்பரியம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களின்... மேலும் படிக்க


மனதளவில் தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். நுட்பமான விஷயங்களை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். தொழில் சார்ந்த பயணங்கள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றமான தருணங்கள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் முக்கிய... மேலும் படிக்க

தோற்றப் பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை தவிர்க்கவும். தலைவலி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உடன் இருப்பவர்களின்... மேலும் படிக்க