
தருமபுரி, ஆக.24-
பாப்பாரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்த மரங்களை அனுமதி யின்றி வெட்டி விற்பனை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் உள்ளது. இதில் சுற்றுச்சுவரை ஒட்டி உள்புற மாக நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் உள் ளன. பல்வேறு வகையான மரங்கள், நிழல் பரப்பி பூங்காவைப் போல் பசுமையாக காட்சி யளிக்கிறது. இதில் அதிகாலை நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பள்ளி மைதா னத்தில் இளைஞர்கள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி செய்வதும், மூத்த குடிமக்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொது மக்களும் நடைபயிற்சி மேற்கொண்டு வரு கின்றனர். இந்நிலையில், ஆக.22 ஆம் தேதி யன்று பள்ளி மைதானத்தில் நன்றாக வளர்ந்த பச்சை மரங்கள் அடியோடு வெட்டப்பட்ட தைக் கண்டு, பொதுமக்கள் அதிர்ச்சிய டைந்தனர். இதுகுறித்து தீக்கதிர் நாளிதழிலில் ஆக.25 ஆம் தேதியன்று விரிவான செய்தி வெளியானது. மேலும், இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, பள்ளி தலைமை யாசிரியர் தமிழ்வாணன் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த போலீ சார், அனுமதியின்றி பள்ளி வளாகத்திலி ருந்த மரங்களை வெட்டிய ஆச்சாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (31) என்பரை செவ்வாயன்று கைது செய்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?