விபத்தில் படுகாயமடைந்த லாரி ஓட்டுநர் சிகிச்சை பெற மறுத்து போதையில் ரகளை

விபத்தில் படுகாயமடைந்த லாரி ஓட்டுநர் சிகிச்சை பெற மறுத்து போதையில் ரகளை

தருமபுரி, ஆக.27-

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த லாரி ஓட்டுநர், மது போதையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற மறுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் காவல் துறையினரிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த அரகாசனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். லாரி ஓட்டுநரான இவர் செவ்வாயன்று இரவு மது போதையில் அரகாசன அள்ளியில் இருந்து நாகாவதி அணை செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற வர், வழி மாறி இண்டூர் சாலையில் சென்றுள்ளார். அப்போது மேடு, பள்ளமாக இருந்த அந்த சாலையில் சென்ற சரவணன் நிலைத்தடுமாறி வனப்பகுதியில் உள்ள பள்ளத்தில் விழுந்துள்ளார். இதையடுத்து அவ் வழியாகச் சென்ற பொதுமக்கள் இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவலளித்தனர். அதன்பேரில் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர், அவரை மீட்க சென்ற போது ரக ளையில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் அவரைப் பிடித்து சமாதானப்படுத்தி ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற மாட்டேன் எனக்கூறிய சரவணன், ரத்தம் ஒழுகும் நிலை யிலும் ரகளையில் ஈடுபட்டார். அங்கிருந்த சரவ ணன் உறவினர்கள் மற்றும் காவல் துறையினர் சமாதா னத்தில் ஈடுபட்டபோது, ஒரு கட்டத்தில் தகாத வார்த்தை களால் பேசியுள்ளார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%