அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உலக தாய்ப்பால் வாரம்
Aug 04 2025
11

சென்னை, ஆக 2–
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நேற்று நடந்தது. டாக்டர்கள், நர்ஸ்கள் உட்பட ஏராளமான பேர் மனித சங்கிலி அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
தாய்ப்பால் ஊட்டுதலை முன்னிலைப்படுத்தி, நிலையான ஆதரவு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கருவை இந்த நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது.
உலக தாய்ப்பால் வார நிகழ்ச்சியை முன்னிட்டு அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முக்கிய நுழைவாயிலில் இருந்து பாரதி கலைக்கல்லூரி வரை மனித சங்கிலி நிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது தாய்ப்பாலுக்கான ஒருமைப்பாட்டையும், கூட்டு பொறுப்பையும் பிரதிபலிக்கிறது.
முதல்வர் டாக்டர் பி.மகேஷ், இயக்குனர் டாக்டர் ஜே. கணேஷ், உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதாமலர், பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், செவிலிய மாணவர்கள், முதுநிலை மாணவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
சுமார் 250 பேர் ஆர்வமுடன் பதாகைகளை பிடித்து, தாய்ப்பாலின் முக்கியத்துவம், தாயும் குழந்தையும் பெறும் நன்மைகள், தாய்ப்பால் ஊட்டுதலை அனைத்து சூழ்நிலையிலும் இயலுமைப்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த மனித சங்கிலி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து, ஒரு திறமையான விழிப்புணர்வு கருவியாக மாறியது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?