ஆடித்தபசு காட்சியில் ஸ்ரீநாகேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
Aug 08 2025
16

தூத்துக்குடிமாவட்டம், கோவில்பட்டி, வடக்குபுதுக்கிராமம்,
M.G.R.நகர் அருள்தரும் ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் திருக்கோவில் ஆடித்தபசு பெருந்திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை காலை 6 மணிக்கு நாகேஸ்வரிஅம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு தெற்குபுதுக்கிராமம் 1வது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசக்திவிநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் மற்றும் தீர்த்தகுடம் எடுத்து ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.பின்னர் மேளதாளம் முழங்க முளைப்பாரி கண் திறப்பு வைபவம் ஆரம்பமானது.
மதியம் கோவில் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சாம பூஜையில் ஸ்ரீநாகேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு பட்டு சாத்தி புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது.
பக்தர்கள் அனைவரும் ஆடித்தபசு திருவிழாவில் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து பிரசாதம் பெற்று சென்றனர்.ஆடித்தபசு விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?