உலகின் 100 மரணங்களில் ஒன்று தற்கொலை

உலகின் 100 மரணங்களில்  ஒன்று தற்கொலை

நியூயார்க், செப்.4: 

 உலகம் முழுவதும் நிகழும் 100 மரணங்களில் ஒன்று தற்கொலையாகத்தான் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் தற்கொலை சார்ந்த பிரச்சனைகளை சமாளிப்பதற்கான முன்னேற்றம் மிகவும் மந்தமாக உள்ளது. குறிப்பாக இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மனநல பிரச்சனைகளை தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. கடைசியாக எடுக்கப்பட்ட தரவுகளின் படி 2021 இல் உலகளவில் சுமார் 7,27,000 பேர் தற்கொலை செய்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட மக்களுக்காக  

உதவி கேட்கும் தலிபான் அரசு

ஆப்கன், செப்.4: 

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று தலிபான் அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆப்க னில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 1,400 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களையும் இடிபாடுகளில் சிக்கியவர்களையும் மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள கலாச்சார தடைகளால் பெண்கள், சிறுமிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

பாகிஸ்தானில் வெள்ளம்: 

24 லட்சம் மக்கள் பாதிப்பு

பாகிஸ்தானில் பெய்த வரலாறு காணாத மழையால் முக்கிய நதிகளில் அதிகளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் 2,900 குக்கிராமங்கள் உள்ளிட்ட சுமார் 3,100 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் சுமார் 24 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் உணவு உற்பத்தியில் பஞ்சாப் மாகாணம் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில் வரும் நாட்களில் உணவுப்பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

‘ஷாங்காய் அமைப்பு வளரும் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது’ 

சர்வதேச ஒழுங்கை உறுதி செய்வதில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆக்கப்பூர்வமான பங்கு வகிக்கிறது என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வளரும் நாடுகளுக்கு எதிராக ஒருதலைப்பட்சமான தடைகளை விதிக்கின்றன. இந்நிலையில் இவ்வமைப்பு தெற்குலக நாடுகளின் நலன்களை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

‘100 ஆண்டுகளில் இல்லாத  

மிகப்பெரிய அச்சுறுத்தல்’

அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை வெனிசுலா எல்லைக்கு அருகில் நிறுத்தி அந்நாட்டை மிரட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய அச்சுறுத்தலை வெனிசுலா எதிர்கொள்கிறது. இது அமெரிக்காவின் நியாயமற்ற, முழுக்க முழுக்க மிரட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட செயல் என அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார். அத்துடன் போதைப்பொருள் கடத்துவதாக அரசின் மீது டிரம்ப் வைத்த குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.  

 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%