வெள்ள நீர் ஓர் ஆசீர்வாதம், சேமித்து கொள்ளுங்கள்: பாகிஸ்தான் அமைச்சர் கருத்தால் சர்ச்சை

வெள்ள நீர் ஓர் ஆசீர்வாதம், சேமித்து கொள்ளுங்கள்: பாகிஸ்தான் அமைச்சர் கருத்தால் சர்ச்சை

இஸ்​லா​மா​பாத்: பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாகாணத்​தில் கனமழை​யால் வரலாறு காணாத வெள்​ளம் ஏற்​பட்​டுள்​ளது. சட்​லெஜ், சீனாப், ராவி ஆகிய நதி​களில் வெள்​ளம் கரைபுரண்டு ஓடு​கிறது. கனமழை, வெள்​ளத்​துக்கு இது​வரை 33 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 2,200 கிராமங்​களை வெள்​ளம் சூழ்ந்​துள்​ளது. இதனால் 20 லட்​சம் பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். பாது​காப்பு கருதி 7 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் இடம்​பெயர்ந்​துள்​னர்.


இந்​நிலை​யில் பாகிஸ்​தான் பாது​காப்பு அமைச்​சர் கவாஜா ஆசிப், உள்​ளூர் தொலைக்​காட்சி ஒன்​றுக்கு அளித்த பேட்​டி​யில், “இந்​தத் தண்​ணீரை சேமித்து வைக்க வேண்​டும். மக்​கள் சாலைகளில் அமர்ந்து போக்​கு​வரத்​துக்கு தடை ஏற்​படுத்தி வரு​கின்​றனர்.


இதற்கு பதிலாக அவர்​கள் தண்​ணீரை தங்​கள் வீட்​டுக்கு எடுத்​துச் சென்று கொள்​கலன்​களில் சேமிக்க வேண்​டும். இந்​தத் தண்​ணீரை ஓர் ஆசீர்​வாத​மாக கருத வேண்​டும். அணை​கள் கட்டி இவ்​வளவு தண்​ணீரைச் சேமிக்க பொது​வாக 8-10 ஆண்​டு​கள் ஆகும்” என்​றார்.


அமைச்​சரின் இந்த சர்ச்​சைக்​குரிய கருத்​தால் சமூக ஊடகங்​களில் பலரும் அவரை கடுமை​யாக விமர்​சித்து வரு​கின்​றனர். இவர்​களில் ஒரு​வர், “டெரரிஸ்​தானில் மட்​டுமே ஒரு சில நகைச்​சுவை நடிகர்​கள் வெள்​ளத்தை ‘தெய்​வீகப் பரிசு’ என்று அழைக்க முடி​யும். கல்​வி​யின் பற்​றாக்​குறை, வெள்​ளத்தை விட பெரிய பேரழி​வு​களை உரு​வாக்​கும்​ என்பதற்கு இதுவே சான்று” என்று கூறியுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%