உலக பாட்மிண்டன் தரவரிசை: டாப் 10-ல் மீண்டும் சாட்விக்-ஷிராக் ஜோடி; லக் ஷயா, உன்னதி ஹூடாவும் முன்னேற்றம்
Aug 01 2025
25

புதுடெல்லி:
பாட்மிண்டன் தரவரிசை பட்டியலை உலக பாட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி மீண்டும் 10-வது இடங்களுக்குள் நுழைந்துள்ளது.
பாட்மிண்டன் தரவரிசை பட்டியலை உலக பாட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த வாரம் நடைபெற்ற சீனா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் அரை இறுதி வரை முன்னேறியிருந்த இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 3 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக் ஷயா சென், 2 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தை பிடித்துள்ளார். அவர், 54,442 புள்ளிகள் பெற்றுள்ளார். ஹெச்.எஸ்.பிரனாய் இரு இடங்கள் முன்னேற்றம் கண்டு 40,366 புள்ளிகளுடன் 33-வது இடத்தில் உள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 17 வயதான இந்தியாவின் உன்னதி ஹூடா 4 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தை பிடித்தார். தரவரிசையில் உன்னதி ஹூடா 31-வது அடைவது இதுவே முதன்முறையாகும். கடந்த வாரம் நடைபெற்ற சீன ஓபன் தொடரின் கால் இறுதி சுற்றில் உன்னதி ஹூடா, இரு முறை ஒலிம்பிக் சாம்பியனான பி.வி.சிந்துவை வீழ்த்தியிருந்தார்.
பி.வி.சிந்து தரவரிசையில் 15-வது இடத்தில் தொடர்கிறார். மகளிர் இரட்டையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 11-வது இடத்தில் தொடர்கிறது. தனிஷா கிரஸ்டோ, அஸ்வினி பொன்னப்பா ஜோடி இரு இடங்கள் முன்னேறி 45-வது இடத்தை பிடித்துள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?