
திருவண்ணாமலை, ஆக.14-
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாநக ராட்சியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாநகராட்சி மத்தளங்குளம் தெருவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்கள் வீடுகள் தோறும் குப்பை கள் சேகரம் செய்யும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் குப்பை களை தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் திருவண்ணாமலை உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளில் விவசாயிகளின் சொந்த உற்பத்தி பொருட்களை விற்பனை செய்கிறார்களா என்பதையும் ஒதுக்கீடு செய்யும் கடைகளில் பதிவேட்டினையும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து வேங்கிக்கால் புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் காலை உணவை குழந்தைகளோடு அமர்ந்து, மாவட்ட ஆட்சியர் காலை உணவு சுவைத்து உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?