சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஜுவரேவ் ; பிரிட்ஸ் அவுட்
Aug 16 2025
13

100 ஆண்டு பழமையான சர்வதேச டென்னிஸ் தொடர்களில் ஒன்றான சின்சினாட்டி ஒபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் ஓஹியோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது நடுக்கட்டத்தை தாண்டியுள்ள நிலை யில், இந்திய நேரப்படி வியாழக் கிழமை அதிகாலை நடைபெற்ற ஆட வர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஜுவரேவ், தரவரிசையில் 14ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் காச்சா னோவை எதிர்கொண்டார். 7-5, 3-0 என்ற கணக்கில் ஜுவரேவ் முன்னி லையில் இருந்த நிலையில், காயம் காரணமாக காச்சானோவ் வெளி யேறினார். இதனால் ஜுவரேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். மேலும் இதே பிரிவில் ஸ்பெயி னின் அல்காரஸ், ரஷ்யாவின் ரப்லவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினர். எனினும் தரவரிசை யில் 4ஆவது இடத்தில் உள்ள முன்னணி வீரரான அமெரிக்காவின் பிரிட்ஸ் 6-3, 5-7, 3-6 என்ற செட் கணக்கில், தரவரிசையில் இல்லாத பிரான்சின் அட்மானேவிடம் வீழ்ந்து தொடரில் இருந்து 4ஆவது சுற்றிலேயே வெளியேறினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?