பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர் நீக்கப்பட்ட விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர் நீக்கப்பட்ட விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:

பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி மேற்​கொள்​ளப்​பட்​டது. இதன்​படி, கடந்த 1-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. அதில் உயி​ரிழந்த மற்​றும் நிரந்​தர​மாக புலம்​பெயர்ந்த 65 லட்​சம் வாக்​காளர்​களின் பெயர் நீக்​கப்​பட்​டுள்​ளன.


தேர்​தல் ஆணை​யத்​தின் இந்த நடவடிக்​கையை எதிர்த்து காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள், ஏடிஆர் தொண்டு நிறு​வனம் உட்பட பல்​வேறு தரப்​பினர் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் 11 மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்த மனுக்​கள் நீதிப​தி​கள் சூர்ய காந்த் மற்​றும் ஜாய்​மாலா பாக்சி அமர்வு முன்பு விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.


இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில் கூறிய​தாவது: பிஹார் வாக்​காளர் பட்​டியலில் 65 லட்​சம் வாக்​காளர்​களின் பெயர் நீக்​கப்​பட்​டுள்​ளது. இதில் 22 லட்​சம் பேர் இறந்​து​விட்​ட​தாக தேர்​தல் ஆணை​யம் கூறுகிறது. அப்​படி​யா​னால் இந்த தகவல் பூத் மட்​டத்​தில் தெரிவிக்​காதது ஏன்? எனவே, நீக்​கப்​பட்ட வாக்​காளர்​களின் பெயர் மற்​றும் அவர்​களை நீக்​கியதற்​கான காரணத்தை வரும் 19-ம் தேதிக்​குள் தேர்​தல் ஆணைய இணை​யதளத்​தில் வெளி​யிட வேண்​டும். அப்​போது​தான் நீக்​கப்​பட்ட ஒவ்​வொரு வாக்​காள​ரும் காரணத்தை தெரிந்து கொள்ள முடி​யும்.


மேலும் பட்​டியலில் இருந்து தங்​கள் பெயர் தவறாக நீக்​கப்​பட்​ட​தாக கருதும் வாக்​காளர்​கள், ஆதார் அட்டை நகலுடன் தேர்​தல் ஆணை​யத்​தில் புகார் தெரிவிக்​கலாம். இது தொடர்​பான தகவலை அதி​கம் விற்​பனை​யாகும் பிராந்​திய மொழி நாளிதழில் தெரிவிக்க வேண்​டும். தூர்​தர்​ஷன் உள்​ளிட்ட முன்​னணி செய்​தித் தொலக்​காட்​சிகளி​லும் செய்தி வெளி​யிட வேண்​டும். மாவட்ட தேர்​தல் அதி​காரி​யின் சமூக ஊடக பக்​கத்​தி​லும் இது பற்​றிய அறி​விப்பை வெளி​யிட வேண்​டும்.


இதுத​விர, பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்ட 65 லட்​சம் வாக்​காளர்​களின் பெயர் (அதற்​கான காரணங்​களு​டன்) பட்​டியலை சம்​பந்​தப்​பட்ட கிராம பஞ்​சா​யத்து அலு​வல​கம் மற்​றும் வட்​டார வளர்ச்சி அலு​வலக தகவல் பலகை​யிலும் வெளி​யிட வேண்​டும்.


மேலும் வாக்​காளர்​கள் தங்​கள் இபிஐசி எண்ணை தேர்​தல் ஆணைய இணை​யதளத்​தில் உள்​ளீடு செய்து நில​வரத்தை தெரிந்து கொள்​வதற்​கான வசதி​யை​யும் செய்ய வேண்​டும். இந்த வழக்​கின் அடுத்த விசா​ரணை வரும் 22-ம் தேதி நடை​பெறும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.


உச்ச நீதி​மன்​றத்​தின் இந்த உத்​தரவை ஏற்​றுக் கொள்​வ​தாக தேர்​தல் ஆணை​யம் நீதி​மன்​றத்​தில் தெரி​வித்​தது. வாக்​காளர் பட்​டியல்​ திருத்​தப்​ பணி​யின்​போது ஆ​தார்​ அட்​டையை ஆவண​மாக கருத முடி​யாது என தேர்​தல்​ ஆணை​யம்​ கூறி​யிருந்​த நிலை​யில்​, அதை ஆவண​மாக சமர்​ப்​பிக்​கலாம்​ என உச்​ச நீதி​மன்​றம்​ உத்​தர​விட்​டிருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%